வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு.. மாதத்தின் முதல் நாளிலேயே ஷாக்.. ரேட் என்ன?
சென்னை: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.48 உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
சர்வதேச கச்சா எண்ணெயின் விலை நிர்ணயத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதே போல சிலிண்டர் விலையும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. மாதம் தோறும் சிலிண்டர் விலை சர்வதேச சந்தை அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 1 ஆம் தேதியான இன்று சிலிண்டர் விலை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்துள்ளது. இதன்படி, ரூ.1855க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை ரூ.1903 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்து இருப்பதால் ஹோட்டல், டீக்கடை உள்ளிட்ட வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக கடந்த மாதமும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்றைய தினம் ரூ 38 உயர்ந்தது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து வருவது உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது சரிவில் உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான வருவாய் கிடைத்துள்ளது.
தொடர்ந்து விலை சரிந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என்ற ஒரு பேச்சும் மத்திய அரசு வட்டாரங்களில் அடிபட்டது. ஆனால், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றம் செய்யப்படாமலே உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 198 வது நாளாக மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75ம், டீசல் விலை ரூ.92.34 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றிற்கு 90 டாலர் முதல் 70 டாலர் வரை உள்ளது. தொடர்ந்து விலையில் ஏற்றம் இறக்கம் இருப்பதால் தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்வது சரியாக இருக்காது என மத்திய எண்ணெய் அமைச்சகம் கருதுவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications