LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்.. எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கையை ஏற்றதால் அறிவிப்பு!
சென்னை: எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மண்டல எல்பிஜி டேங்க் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தில் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் இணைந்துள்ளனர்.

மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் இருந்து எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு எரிவாயுவை டேங்கர் மூலம் வாடகை ஒப்பந்தம் அடிப்படையில் இயக்கி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க லாரிகள் எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் முன்பு வேலை நிறுத்தத்தைத் தொடங்க அறிவித்திருந்தது.
2025 முதல் 2030ஆம் ஆண்டுகளுக்கான புதிய வாடகை ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டு இருந்தன. அதில் எல்பிஜி லாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அந்த விதிமுறைகளைத் தளர்த்தக் கோரி மூன்று கட்டங்களாக எல்பிஜி டேங்கர் லாரிகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
ஆனால் மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாததால் கடந்த 27 ஆம் தேதி தென் மண்டல அளவில் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர். இதற்கு மத்தியில் கோவையில் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி.எல். உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதன் காரணமாக எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் 4-ஆவது நாளாக இன்றும் (மார்ச் 30) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வீடுகள், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், தென் மாநிலங்ங்கள் முழுவதும் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றதை அடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications