Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடி வெள்ளி கிழமையில..அம்மனையே எழுப்பி விடும் எல்.ஆர்.ஈஸ்வரி! 85 வயதிலும் மங்காத குரல் வளம்! ஒரே குறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி மாதம் துவங்கி விட்ட நிலையில் எங்கு பார்த்தாலும் திருவிழா, கிடா வெட்டு, அன்னதானம் என களைகட்டி வருகிறது. காலையோ, மாலையோ 5 மணி ஆனாலே எல்ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் தான் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை கடந்தும் எல்ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் அம்மன் கோவில்களில் ஒலித்து வருகிறது. இந்த நிலையில் தன்னால் முடிந்ததை அம்மனுக்கு செய்திருக்கிறேன், ஆயுள் உள்ளவரை அம்மனுக்காக பாடுவேன் என கூறி நெகிழ வைத்து இருக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி.

தமிழ் மாதங்களில் கார்த்திகை, மார்கழி, தை, புரட்டாசி மார்கழி என இறைவனுக்கு உகந்த மாதங்கள் பல இருந்தாலும் ஆடி மாதம் எப்போதுமே தமிழர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற பக்தர்களுக்கு மிக நெருக்கமானது.

புரட்டாசியில் பெருமாளுக்கும், மார்கழி தை மாதங்களில் ஐயப்ப பக்தர்களும் முருக பக்தர்களும் மாலை அணிவித்து விரதம் இருப்பார்கள். ஆனால் ஆடி மாதம் என்றாலே உற்சாகம் களை கட்டி விடும், குலதெய்வங்கள், தங்கள் இஷ்ட தெய்வங்களை வணங்கும் மக்கள் கறி விருந்துடன் உறவினர்களை அழைத்து விருந்து வைத்து மகிழ்ச்சி அடைவார்கள்.

LR Eswari Aadi Festival

ஆடி மாதம் என்றாலே போதும் காலையில் தொடங்கி இரவு வரை ஏதாவது ஒரு கோவிலில் நிச்சயம் திருவிழா இருக்கும். அம்மனுக்கு கூழ்வார்த்து அசைவ விருந்து படைத்து அதனை பகிர்ந்துண்டு மகிழ்வார்கள் பக்தர்கள். ஆடி மாதம் எப்படி கறி விருந்து முக்கியத்துவம் பெறுகிறதோ, அதை விட முக்கியத்துவம் பெற்றதுதான் எல்.ஆர்.ஈஸ்வரியின் அம்மன் பாடல்கள். தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே பாடகியாக அறிமுகமாகி நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி இருந்தாலும் எல்லாரும் ஈஸ்வரியின் அம்மன் பாடல்களுக்கு எப்போதுமே தனி மகத்துவம் உண்டு.

மஞ்சள் பூசி நெற்றி நிறைய குங்குமத்துடன் அம்மனை போலவே காட்சியளிப்பார் ஈஸ்வரி. அந்த காலத்தில் மாலை நேரங்களில் பல தொலைக்காட்சிகளில் எல்ஆர் ஈஸ்வரியின் பாடல்களை வீடியோவோடு ஒளிபரப்புவார்கள். இப்போதும் கூட காலை மாலை என அனைத்து கோவில்களிலும் ஒலிப்பது என்னவோ எல் ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் தான்.

ஆடி வெள்ளிக்கிழமையில.. செல்லாத்தா செல்ல மாரியாத்தா.. தாயே கருமாரி.. கற்பூர நாயகியே கனகவல்லி.. பூவாடை கட்டிகிட்டு.. ஓம் சக்தி.. தாயே கருமாரி.. சமயபுரம் நாயகியே என எல்ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் தான் ஆடி மாதத்தை அலங்கரிக்கும். கிட்டத்தட்ட 85 வயதை கடந்துவிட்டார் எல்.ஆர்.ஈஸ்வரி .அவரது அம்மன் பாடல்கள் வெளிவந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இருந்தபோதும் அம்மன் கோவில்களை என்றாலே எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் தான், அம்மனையே எழுப்பி விட்டு வருகிறது.

இந்த நிலையில் பல தசாப்தங்களை கடந்தும் தனது பாடல்கள் பக்தர்களால் கொண்டாடப்படுவது குறித்து பேசி இருக்கிறார் எல்ஆர் ஈஸ்வரி.," ஆடி மாதம் வந்ததும் எல்லா கோவில்களிலும் எனது பாடல்கள் தான் ஒலிக்கிறது. அவற்றைக் கேட்கும் போது என்னை அறியாமலேயே ஒரு வித பக்தி என் மனதில் வந்துவிடும். என் சினிமா பயணத்தில் எத்தனையோ பாடல்களை பாடி இருந்தாலும் பக்தி பாடல்களை பாடிய போது ஒருவித பரவசம் எனக்குள் ஏற்பட்டது. பலர் ஆன்மீகத்துக்காக நிறைய செய்திருக்கிறார்கள். என்னால் முடிந்த சிறு பங்களிப்பை மாரியம்மனுக்கு அளித்துள்ளேன். எனக்கும் என் குரலுக்கும் என்றுமே அழிவு கிடையாது. ஆனால் இப்போது வருவதெல்லாம் பாடல்கலே இல்லை. அவற்றை பாடல்கள் என்று எப்படி சொல்ல முடியும்?"எனக் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+