சந்திர கிரகணம் முடிந்ததும்.. ஐதீகப்படி எதையெல்லாம் செய்ய வேண்டுமாம் தெரியுமா?
சென்னை: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இது புறநிழல் சந்திர கிரகணமாக பெனும்பிரல் சந்திர கிரகணமாக நிகழ்கிறது. பொதுவாக கிரகணங்கள் என்றாலே நமது ஊரில் சில ஐதிகங்கள் சொல்லப்படுகின்றன. அது தொடர்பான விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்று ஒரே நேர்க்கோட்டில் வரும் நாள் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. பவுர்ணமி நாளில்தான் இது ஏற்படும். தெளிவாக சொல்வது என்றால், நிலவு மீது விழும் சூரியனின் ஒளியை பூமி மறைத்தால் முழு சந்திர கிரகணம் ஆகும். நிலவு மீது விழும் சூரிய ஒளியை பகுதியளவு மறைத்தால் பகுதி சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது. இந்த சந்திர கிரகணம் பகுதியாக தெரியும். கிரகணத்தின் போது நிலவு வழக்கத்தை விட சற்று கருமையாக காணப்படும். கிரகணத்தை ஐரோப்பியா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் பார்க்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.
பொதுவாக கிரகணங்கள் என்றாலே நமது ஊரில் சில ஐதிகங்கள் சொல்லப்படுகின்றன. அது தொடர்பான விவரங்களை இங்கே பார்க்கலாம்.
* எந்த ஒரு கிரகணங்களாக இருந்தாலும், கிரகணம் முடிந்ததும் தலைக்கு குளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். கிரகணத்தின் போது வளிமண்டலத்தில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் எனவும் இதனால் குளியல் போடுவது நல்லது என அறிவியல் ஆய்வளர்கள் கூறுவதாக கூட ஒரு கருத்து நிலவுகிறது.
* கிரகணத்தின் போது வீட்டு பூஜை அறையை மூடி வைக்க வேண்டும் என்றும் கிரகணம் முடிந்த பிறகு பூஜை அறையை திறந்து சுத்தம் செய்த பின்னரே வழிபட வேண்டும் என்று ஆன்மீக நம்பிக்கைகள் கூறுகின்றன.
* கிரகணம் முடிந்த பிறகு உணவு மற்றும் உடைகளை ஏழைகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. கிரகணத்தின் போது விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவளிப்பது நல்லது என்றும் ஆன்மீகம் சொல்கிறது.
* கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். பிறக்கப்போகும் குழந்தைக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதையும் கிரகணத்தைப் பார்ப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
* கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பிருந்தே எந்த வித உணவும் உட்கொள்ளக் கூடாது என்று ஐதீகம் சொல்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications