Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பண மோசடி புகாரில் நடிகை ஜெயலட்சுமி கைதானது ஏன்? நடந்தது என்ன? பாடலாசிரியர் சினேகன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணமோசடி புகாரில் நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டது குறித்து பாடலாசிரியர் சினேகன் விளக்கமளித்துள்ளார்.

பண மோசடி புகாரில் நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாடலாசிரியர் சினேகன் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் 2015 ஆம் ஆண்டு சினேகம் பவுன்டேஷன் என்ற அமைப்பை தொடங்கினேன். நான் சம்பாதிக்கும் பணத்தில் அந்த அறக்கட்டளை மூலம் சிறிய உதவிகளை செய்து வந்தேன். அப்போது 2022 ஆம் ஆண்டு எனது சினேகம் பவுன்டேஷன் பெயரில் ஒரு வங்கிக் கணக்குகளை சமூகவலைதளங்களில் கொடுத்து யாரோ வசூல் செய்வதாக எனது நண்பர்கள் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது.

 Lyricist Snehan explains why Actress Jayalakshmi arrested?

எனக்கு இது அதிர்ச்சியாகவே இருந்தது. ஏனென்றால் நான் வலைதளங்களில் எனது அறக்கட்டளை தொடர்பாக எந்த நிதியையும் திரட்டவில்லை. உடனே நான் அவர்கள் குறிப்பிட்டிருந்த இணையதள முகவரியை சோதனை செய்த போது சினேகம் அறக்கட்டளை என்ற பெயரில்தான் பணம் வசூல் செய்வதாக தகவல் கிடைத்தது.

முகவரியில் யாருமில்லை: உடனே அந்த இணையதளத்தில் இருந்த முகவரியை நான் தொடர்பு கொண்ட போது அவர்களை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதையும் மீறி இணையத்தில் கொடுக்கப்பட்ட முகவரிக்கும் ஆளை அனுப்பி பார்த்தேன். ஆனால் நாங்கள் அனுப்பிய முகவரியில் ஆளே இல்லை என தகவல் கிடைத்தது.

கமிஷனரிடம் புகார்: உடனே நாங்கள் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தேன். அந்த புகார் மனுவில் எனக்கு சொந்தமான பெயரில் யாரோ பணம் வசூல் செய்கிறார்கள். இதனால் எனக்கும் எனது அறக்கட்டளைக்கும் கெட்ட பெயர் வரும். எனவே எனது அறக்கட்டளை பெயரில் வசூலிக்காதபடி நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தேன். அங்கிருந்துதான் இந்த அறக்கட்டளை பிரச்சினை ஆரம்பித்தது.

மறுத்த ஜெயலட்சுமி: எனது புகாருக்கு மறுப்பு தெரிவித்த நடிகை ஜெயலட்சுமி எனக்கு எதிராக ஒரு புகார் கொடுத்திருந்தார். அப்போது நான் அவரிடம் சமாதானம் பேச முற்பட்டேன். அவர் அந்த அறக்கட்டளையை 2018ஆம் ஆண்டு முதல் பதிவு செய்து நடத்தி வருவதாக தெரிவித்திருந்தார். எனவே கமிஷனர் அலுவலகத்தில் அவருடன் இரு முறை சமாதானம் பேச முற்பட்ட போது ஜெயலட்சுமி பிடி கொடுத்தே பேசவில்லை.

களங்கம்: அவர் சொல்வதுதான் சரி என்றே கூறிக் கொண்டிருந்தார். நான் இந்த விவகாரத்தில் ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்தித்து என் தரப்பு விளக்கத்தை அளித்தேன். அதில் கூட நான் சொன்னது "எனது அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி பணம் வசூலிக்கிறார்கள். அது எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிடும். இதை தடுக்க வேண்டும்" என்று மட்டும்தான் நான் சொன்னேன்.

பெரிதாக்கிய நடிகை: ஆனால் ஜெயலட்சுமியோ இந்த பிரச்சினையை ஊதி ஊதி ஒரு மாதத்திற்கு பேசி பெரிதாக்கினார். இதையடுத்து அவர் சமாதான முயற்சிகளில் ஈடுபடாததால் அவர் என் மீது போட்ட புகாரை ரத்து செய்ய வழக்கு போட்டேன். அப்போது நான் அவரது மேல் போட்ட புகாரை தள்ளுபடி செய்ய அவரும் கேட்டிருந்தார். ஆனால் நீதிமன்றமோ அது முடியாது என கூறி அவருடைய கேஸை தள்ளுபடி செய்துவிட்டது.

நீதிமன்றம் தள்ளுபடி: அதே போல் என் மீது ஜெயலட்சுமி கொடுத்த புகாரை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில் நான் அவர் மீது கொடுத்த புகாரின் பேரில் தான் நேற்று ஜெயலட்சுமியிடம் விசாரணை நடந்தது. ஜெயலட்சுமி தவறு செய்திருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றம்தான் முடிவெடுக்கும். இதில் நான் செய்வதற்கு எதுவுமே இல்லை, நீதிமன்றம் போட்ட உத்தரவின்படிதான் ஜெயலட்சுமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.

சமாதானத்திற்கு மறுப்பு: இந்த விஷயத்தை சமாதானமாக பேசியிருக்கலாம். ஆனால் அவர்தான் அதற்கு தயாராக இல்லாமல் பேசி பேசி பெரியதாக்கினார். இனி அவர்தான் தனது மேல் எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். என் அறக்கட்டளையை பயன்படுத்தி அவர் எவ்வளவு வசூல் செய்தார் என்ற விவகாரத்துக்குள் நான் நுழைய விரும்பவில்லை. அதை நீதிமன்றமும் போலீஸ் விசாரணையும் பார்த்துக் கொள்ளும். எனக்கு வேண்டியது என் பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். ஆனால் அது, அரசியல் காழ்ப்புணர்ச்சி என்ற திசையை நோக்கி சென்றது. இதனால் நான் கேஸ் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு சினேகன் தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+