சிறிது காலம் ஒடுங்குவோம்; சிறகு கொள்வோம்.- ஊரடங்கை பின்பற்ற கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்
சென்னை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள 2 வார ஊரடங்கை முழுமையாக பின்பற்றுவோம் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2-வது பரவல் மிக மோசமான அழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா 3-வது அலையும் தாக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாடுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு:
கூட்டுப்புழு
தன்னொடுக்கம் கொள்வது
வானளக்கும் சிறகு வாங்கி
வண்ணத்துப்பூச்சியாகத்தான்;
ஊரடங்கும் அப்படித்தான்.
சிறிது காலம் ஒடுங்குவோம்;
சிறகு கொள்வோம்.
#Lockdowntamilnadu
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications