"ஏர்பிடிக்கக் கற்றுக் கொடுத்தவரும் என் ஆசானே" ரசிகர்களை கவர்ந்த வைரமுத்துவின் ஆசிரியர் தின வாழ்த்து!
சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் பலரையும் கவர்ந்து வருகிறது.
மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ள நபர்கள் குரு. நமக்கு இந்த உலகை கற்பிக்கும் ஆசான். குருகுலக் கல்வி முறையில் இருந்து வகுப்பறை கல்விக் கூடங்கள் என மாற்றம் ஏற்பட்ட போதிலும், மாற்றம் காணாதவை ஆசிரியர்கள் மட்டுமே.
நமக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். அப்படிப்பட்டவர்களை நாம் கொண்டாட வேண்டியது அவசியமான ஒன்று.

ஆசிரியர் தினம்
இந்தியாவின் முதல் குடியரசு துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரும் ஆண்டும் ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தலைவர்கள் வாழ்த்து
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், மாணவர்களும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல்வேறு பள்ளிகளிலும் ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வைரமுத்து கவிதை
இந்த நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து கவிதை ஒன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அது, ஆசான்கள் ஆயிரம்பேர். எழுத்தறிவித்தவர் மட்டுமல்லர் ஏர்பிடிக்கக் கற்றுக்கொடுத்தவரும் என் ஆசான்தான். நியூட்டன் மட்டுமல்ல நீச்சல் கற்றுத்தந்த தலித் நண்பனும் என் ஆசான்தான்.
நற்றிணை மட்டுமல்ல நாட்டார்மொழி கற்றுத்தந்த பாமரனும் என் ஆசான்தான். உலகம் வகுப்பறை ஆசிரியர்களே வணங்குகிறேன் என்று எழுதியுள்ளார்.

அனைவரும் ஆசிரியர் தான்
இந்த கவிதை மூலம் எழுத்து கற்றுக் கொடுத்தவர் மட்டுமல்ல, விவசாயம் பழகிக் கொடுத்தவரும், நீச்சல் கற்றுக் கொடுத்த நண்பனும் ஆசான் என்று வைரமுத்து கூறியுள்ளார். வாழ்வில் ஒவ்வொரு நாளும் தனக்கு வழிகாட்டியாகவும், வாழ்க்கையை கற்றுக் கொடுத்து வரும் அனைவரும் ஆசான் என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பலரையும் கவர்ந்து வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications