வைரமுத்துவின் நாட்படு தேறல் 2! ஏப்ரல் 17 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெளியாகிறது!
சென்னை: கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் 2வது பாட்டுத்தொடர் ஏப்ரல் 17 முதல் கலைஞர், இசையருவி சேனல்களில் வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியர், கவிஞராக இருப்பவர் வைரமுத்து. இவர் நாட்படு தேறல் என்ற பெயரில் வாரம் ஒரு பாடல் வீதம் 100 பாடல்கள் உருவாக்கி வெளியிட முடிவு செய்தார்.

இதன்மூலம் 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் வைரமுத்துவின் 100 பாடல்கள் வெளிவர உள்ளது. இதற்கான தலைப்பு பாடலை ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைப்பில் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவானது. இந்த பாடலை ஷங்கர் மகாதேவன் பாடி இருந்தார்.

நாட்படு தேறல் ஒன்று பாட்டுத்தொடர் முடிவடைந்த நிலையில் நாட்படு தேறல் 2 பாட்டுத்தொடர் துவங்கி உள்ளது. ஏப்ரல் 17 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் கலைஞர், இசையருவி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது.
இதில் இசையமைப்பாளர்கள் வித்யாசாகர், யுவன் சங்கர்ராஜா, ஜிவி பிரகாஷ், ரமேஷ் விநாயகம், அனில் சீனிவாசன், சைமன் கே கிங், நவ்பல் ராஜா, அவ்கத், ரமேஷ் தமிழ்மணி, ஜெரார்ட் பெலிக்ஸ், வாகு மசான், இனியவன் உள்ளிட்டவர்களின் இசையமைப்பில் பாடல்கள் வெளிவர உள்ளன.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கூறுகையில், ‛‛நாட்படு தேறல் முதற்பருவத்துக்கு அன்பையும், வாழ்த்துகளையும் அள்ளித்தந்த தமிழர்களுக்கு என்
உள்ளம் கனிந்த நன்றி. இதோ நாட்படுதேறல் 2வது பருவம். கலைஞர், இசையருவி, யூடியூப்பில் மூன்றிலும் சித்திரை முதல் வாரத்தில் இருந்து 13 பாடல்கள், 13 வாரங்கள். ஒவ்வொரு பாட்டும் ஒரு அனுபவம். ஒவ்வொரு பாட்டும் கவிதை துண்டு. செழுமையான காட்சிகள். இளமையான இசை. வளமையான தமிழ். கேளுங்கள். காத்திருங்கள், காணுங்கள், களியுங்கள். வாழ்த்துங்கள்'' என கூறியிருந்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications