தண்ணீர் தண்ணீர்.. குடிக்கத்தான் இல்லை ஒரு துளி! சென்னை வெள்ளம் குறித்து வைரமுத்து உருக்கமான பதிவு
சென்னை: சென்னை பெருவெள்ளம் பாதிப்பை அடுத்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 1 லட்சம் வழங்குகிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

'தண்ணீர் தண்ணீர்
எங்கணும் தண்ணீர்
குடிக்கத்தான் இல்லை ஒருதுளி'
எனும் ஆங்கிலக் கவிதை
நினைவின் இடுக்கில் கசிகிறது
வீட்டுக்குத் தண்ணீர் இல்லை
என்பது சிறுதுயரம்
வீட்டுக்குள்ளேயே தண்ணீர்
என்பது பெருந்துயரம்
விடியும் வடியும் என்று
காத்திருந்த
பெருமக்களின் துயரத்தில்
பாதிக்கப்படாத நானும்
பங்கேற்கிறேன்
என் கடமையின் அடையாளமாக
முதலமைச்சரின்
பொது நிவாரண நிதிக்கு
ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன்
பொருள்கொண்டோர்
அருள்கூர்க
சக மனிதனின் துயரம்
நம் துயரம்
இடர் தொடராதிருக்க
இனியொரு விதிசெய்வோம்;
அதை எந்தநாளும் காப்போம்
இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
‘தண்ணீர் தண்ணீர்
— வைரமுத்து (@Vairamuthu) December 9, 2023
எங்கணும் தண்ணீர்
குடிக்கத்தான் இல்லை ஒருதுளி'
எனும் ஆங்கிலக் கவிதை
நினைவின் இடுக்கில் கசிகிறது
வீட்டுக்குத் தண்ணீர் இல்லை
என்பது சிறுதுயரம்
வீட்டுக்குள்ளேயே தண்ணீர்
என்பது பெருந்துயரம்
விடியும் வடியும் என்று
காத்திருந்த
பெருமக்களின் துயரத்தில்… pic.twitter.com/62GburnxT9
சென்னையில் மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, பீர்க்கங்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. ஆங்காங்கே 15 அடி வரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வீடுகள், உடைமைகள் உள்ளிட்டவைகளுடன் சிலர் உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளனர். எல்லா இடங்களிலும் தண்ணீர் இருந்த போதிலும் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் மழை நீரை பலர் குடித்த அவலங்களும் நடந்துள்ளன. அது போல் குழந்தைகளுக்கு பால் கிடைக்காமல் பலர் அவதிப்பட்டனர். இதற்காக தன்னார்வலர்கள் பலர் இலவச பால் பாக்கெட்டை வழங்கினர்.இந்த நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தாராளமான நிதி வழங்கி வருகிறார்கள். ஆசிரியர்கள் சங்கம் ஒரு நாள் ஊதியத்தை கொடுப்பதாக வாக்களித்துள்ளது. அது போல் பாமக, திமுக, அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை தருவதாக அறிவித்துள்ளது.
முதலில் ஓடி வந்து வெள்ள நிவாரண நிதிக்கு ரூ 10 லட்சம் கொடுத்தவர்கள் நடிகர்கள் சூர்யாவும் கார்த்தியும்தான். இதைத் தொடர்ந்து பலர் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் வைரமுத்துவும் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 1 லட்சத்தை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications