நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி.. அதுக்கு முதல்வராகிடுங்க ஸ்டாலின்.. ஜெயக்குமார் அறிவுரை!
முதல்வராக விரும்பும் ஸ்டாலின், நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி பின் அதன் முதல்வராக தன்னை அறிவித்து கொள்ளலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வராக விரும்பும் ஸ்டாலின், நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி பின் அதன் முதல்வராக தன்னை அறிவித்து கொள்ளலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தாவின் கைலாசம் நாடு குறித்த செய்திகள் இணையத்தை மொத்தமாக ஆக்கிரமித்து இருக்கிறது. ஐநாவில் புதிய நாட்டிற்கு அனுமதி அளிக்க கோரி நித்தியானந்தா விண்ணப்பித்து இருக்கிறார். தன்னுடைய தீவுதான் உலகில் முதல் தனி இந்து நாடாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது நித்தியானந்தாவின் இந்த தனி தமிழக அரசியலை யும் ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. இதை வைத்து திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார் .

தனி தீவு
ஜெயக்குமார் தனது பேட்டியில், முதல்வராக விரும்பும் ஸ்டாலின், நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி முதல்வராக அறிவித்து கொள்ளலாம். ஸ்டாலின் மட்டுமல்ல யார் யார் எல்லாம் முதல்வராக விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் தனி தீவி வாங்கிக் கொள்ளலாம்

என்ன கனவு
தமிழகத்தில் நிறைய பேருக்கு முதல்வர் கனவு இருக்கிறது. ஆனால் அவர்கள் எல்லாம் முதல்வராகிவிட முடியாது. அதிமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும்.அதிமுகவை சேர்ந்தவர்தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக இருப்பார்.

ஸ்டாலின் கனவு
ஸ்டாலின் முதல்வர் கனவில் குழம்ப தொடங்கிவிட்டார். அது அவரின் பேச்சிலும் தெரிகிறது.
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாற்றிமாற்றி பேசுகிறார் ஸ்டாலின்.திமுக குழப்பமான கட்சி, அதன் தலைவர் ஸ்டாலின் குழப்பமான நபர்.

குருமூர்த்தி
அரசியலில் குருமூர்த்தி கத்துக் குட்டி.அவருக்கு அரசியல் குறித்தும் மக்கள் குறித்தும் ஒன்றே தெரியாது. அவருக்கு அதிமுகவை விமர்சனம் செய்ய தகுதி கிடையாது. குடியுரிமை திருத்த மசோதாவால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதனால் அந்த மசோதாவை நாங்கள் ஆதரித்து பேசினோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications