பாஜகவின் அரசகுமார் நேர்மையாக பேசி இருக்கிறார்.. நன்றி.. புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்!
பாஜகவின் மாநில துணை தலைவர் அரசகுமார் மிகவும் பேசி இருக்கிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: பாஜகவின் மாநில துணை தலைவர் அரசகுமார் மிகவும் பேசி இருக்கிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் இல்ல திருமண விழா தற்போது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பி இருக்கிறது. பாஜக உறுப்பினர்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.
பாஜகவின் மாநில துணை தலைவர் அரசகுமார் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

ஸ்டாலின் கலந்து கொண்டார்
இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். ஸ்டாலினை வைத்துக்கொண்டே மேடையில் பேசிய பாஜகவின் மாநில துணை தலைவர் அரசகுமார், கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகியிருக்க முடியும், அவர் அப்போது அப்படி எல்லாம் செய்யவில்லை. அவர் விதிகளுக்கு முரணாக செயல்படவில்லை. அவர் கடைசி வரை ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார்.

என்ன சொன்னார்
தமிழக முதல்வராக ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்பார். காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். தமிழகம் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக பார்க்கும் என்று குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு தமிழக அரசியலில் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டாலின் பதில்
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அதே மேடையில் பதில் அளித்தார். அதில், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் . 2021ல் திமுக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். மக்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. மக்கள் அதை பார்க்க போகிறார்கள்.

மிசா எப்படி
நான் மிசாவில் கைத்தானத்தை கூட விமர்சனம் செய்கிறார்கள். தேவையில்லாமல் சர்ச்சைகளை எழுப்புகிறார்கள். நான் மிசாவில் கைதானேன், நான் ஜெயிலுக்கு போனேன் என்பதை நானே சொல்வது வெட்கமாக இருக்கிறது.

நன்றி
என்னை முதல்வராவேன் என்று கூறிய அரசகுமாருக்கு நன்றி. தான் இருக்கும் கட்சி மீதும், அதிகாரம் மீதும் எந்த விதமான அச்சமும் இல்லாமல் அவர் பேசி இருக்கிறார்கள். மிகவும் நேர்மையாக அரசகுமார் உண்மையை பேசி உள்ளார், என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications