புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் அறிய விவசாயிகளுக்கு வாட்ஸ் ஆப் குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தப்படும்- அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்
சென்னை: விவசாயிகளுக்கு வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2023- 2024 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்றைய தினம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்றைய தினம் வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபையில் இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் பேசியதாவது: 2,504 கிராமங்களில் ரூ.230 கோடி நிதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் அமைக்கப்படும்.

பிரதமர் பயிர் காப்பீடு
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். தமிழ்நாடு அரசால் ₹1695 கோடி காப்பீடு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டு, 6.77 லட்சம் விவசாயிகளுக்கு ₹783 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆறுகள், கால்வாய்களில், தடுப்பணைகள், வயல் சாலைகள் அமைத்ததால் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.

20 மாவட்டங்கள்
சிறு தானிய பரப்பை அதிகரிக்க 20 மாவட்டங்கள் அடங்கிய இரு சிறுதானிய மண்டலங்கள் அமைக்கப்படும். நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் சிறுதானிய மண்டலங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. கம்பு, கேழ்வரகு நேரடியாக கொள்முதல் செய்து கல்வி நிலையங்களுக்கு வழங்கப்படும். 2,504 கிராம பஞ்சாயத்துகளில் ஊருக்கு 300 குடும்பங்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களை அதிகமாக விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நீலகிரி மாவட்டம்
முதற்கட்டமாக தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ₹15 கோடி செலவில் வழங்கப்படும். *பருவத்திற்கு ஏற்ற பயிர் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்.

ரூ 5 லட்சம் காசோலை
வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்கை எடுத்துரைக்கும் விதமாக அங்கக வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்.இவ்விருது ₹5 லட்சம் காசோலையுடன், பாராட்டு பத்திரம் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். நெல் ஜெயராமன் மரபு பாதுகாப்பு இயக்கம் மூலம் 196 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டன.

வேளாண்மை தோட்டக் கலை
வேளாண்மை தோட்டக்கலை பட்ட படிப்பு முடித்த பட்டதாரிகள், தொழில்முனைவோராக தலா 2 லட்சம் நிதி உதவி வழங்க 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாயத்தில், ரசாயனம், உர பயன்பாட்டை குறைத்து, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இயற்கை உரங்களை தயாரிக்க 100 குழுக்களுக்கு 1 லட்சம் வீதம் வழங்க, ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மண்ணில் ஊட்டச்சத்து
ஏரி, குள வண்டல் மண்ணில் ஊட்ட சத்து இருப்பதால் விவசாயிகள் இவற்றை இந்த ஆண்டும் வயல்களுக்கு இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மை திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும். 1 லட்சம் ஏக்கரில் மாற்று பயிர் சாகுபடிக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 6 லட்சம் ஏக்கரில் நெல்லுக்குப் பின் மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வாட்ஸ் ஆப்
355 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் ரூ.2 கோடியில் மின்னணு உதவி மையங்கள் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்பம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் கொண்டு செல்ல வட்டார அளவில் WhatsApp குழுக்கள் அமைக்கப்படும். இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கபட்ட 40.74 லட்சம் ஏக்கர் பதிவு செய்த 26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு அளிக்கப்படும். வரும் ஆண்டில் 127 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறுதானியங்கள்
சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய திருவிழா நடத்தப்படும். ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் காடு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு 75 லட்சம் செம்மரம், தேக்கு,சந்தனம் முழு மானியத்தில் வழங்க 15 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆதி திராவிட, பழங்குடியின சிறு - குறு விவாசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் தரப்படும். ஆதி திராவிட சிறு - குறு விவாசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பழங்குடியின சிறு - குறு விவாசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கறவை மாடு
கறவை மாடு, ஆடுகள், கோழி, தீவனப் பயிர், பழ மரங்கள், மரக் கன்றுகள், தேனீக்கள், மண்புழு உரம், பண்ணைக் குட்டை நீர் வளர்ப்பு ஊக்குவிக்கப்படும். இவை அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, ரூ.50,000 மானியம் வழங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உழவர் நலன்சார்ந்த தகவல்களை கணினிமயமாக்கி Grains (One Stop Solution) இணையதளம் அறிமுகம் செய்யப்படும்.

வேளாண் பயிர் காப்பீட்டு
வேளாண் பயிர்காப்பீட்டு மானியத்திற்காக, மாநில அரசின் பங்காக, ரூ.2337 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.O
3 அல்லது 4 கிராமங்களுக்கு தலா, ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்
4311 வேளாண் விரிவாக்க அலுவலர்கள் 4 கிராமங்களுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்துவர். இவ்வாறு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications