சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேரா வந்தாரு.. யோகா செஞ்சாரு.. போய்கிட்டே இருந்தாரு.. மா. சுப்பிரமணியனை பார்த்து அசந்த டாக்டர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அறிஞர் அண்ணா அரசினர் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்த சுகாதாரத் துறை அமைச்சர் நேராக வந்து பயிற்சி மாணவியுடன் செய்த ஆசனங்களை கண்டு மருத்துவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Recommended Video

    தலைகீழா காலைத் தூக்கி ஆசனம் .. அசர வைத்த அமைச்சர்! வைரலாகும் வீடியோ

    திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தற்போதைய கொரோனா சவாலை சந்திக்க யார் சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து கடந்த மே 6 ஆம் தேதி அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

    அந்த பட்டியலில் சுகாதாரத் துறை யாருக்கு என்பதைதான் அனைவரும் தேடினர். அதில் அந்த துறை நம் முன்னாள் மேயர் மா சுப்பிரமணியனுக்கு அளிக்கப்பட்டது. இவர் உடல்நலனில் மிகவும் அக்கறை கொண்டவர்.

    போஸ்டிங் கேட்டு வராதீங்க... அமைச்சர் மா சுப்பிரமணியன் ஒட்டிய போஸ்டர்.. செம்ம வைரல் போஸ்டிங் கேட்டு வராதீங்க... அமைச்சர் மா சுப்பிரமணியன் ஒட்டிய போஸ்டர்.. செம்ம வைரல்

    மாரத்தான் போட்டி

    மாரத்தான் போட்டி

    தினந்தோறும் யோகா பயிற்சிகளையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்பவர். மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டவர். இதை விட சென்னையில் கொரோனா பாதிப்புகளை விரல் நுனியில் வைத்திருப்பவர். ஸ்டாலின் பொறுப்பேற்பதற்கு முன்னர் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் மா சுப்பிரமணியனையும் வரவழைத்த ஸ்டாலின், கொரோனா நிலவரங்களை கேட்டறிந்தார்.

    இரண்டாவது அலை

    இரண்டாவது அலை

    தற்போது தமிழகத்தில் இரண்டாவது அலை குறைய பல்வேறு முயற்சிகளை எடுத்தவர் மா சுப்பிரமணியன். இந்த நிலையில் மா சுப்பிரமணியன் அறிஞர் அண்ணா அரசினர் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் சித்த மருத்துவ வார் ரூம் எனும் ஒருங்கிணைந்த கட்டளை மையம் திறக்கப்பட்டது.

    துறை ரீதி

    துறை ரீதி

    இந்த மையத்தை பார்வையிடவும் துறை ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளவும் நேற்றைய தினம் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், எம்பி தயாநிதிமாறன் உள்ளிட்டோர் சென்றனர். அவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியையும் பார்வையிட்டார்.

    சிகிச்சைகள்

    சிகிச்சைகள்

    அங்கு வைக்கப்பட்டிருந்த இயற்கை பானத்தை மா சுப்பிரமணியன், தயாநிதி மாறன் உள்பட அமைச்சர்கள், எம்பிக்கள் அருந்திவிட்டு இனிப்பாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் இந்த மருத்துவமனையில் எந்த மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்பதை கேட்டறிந்தனர்.

    மனஉளைச்சல்

    மனஉளைச்சல்

    இதையடுத்து நோயாளிகளுக்கு எந்த மாதிரியான யோகா பயிற்சிகளை அளிக்கிறோம் என்பது குறித்து செயல்முறை அளிக்க பயிற்சி மாணவி தயாரானார். அப்போது அந்த யோகா அரங்கிற்கு வந்த மா சுப்பிரமணியன் சர்வங்காசனம் செய்தார். இதை அனைவரும் பாராட்டினர். இதை பார்த்த மருத்துவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த ஆசனத்தை செய்தால் மூளை அமைதியாகும். மன உளைச்சல் நீங்க உதவும்.

    புரோஸ்டேட் சுரப்பி

    புரோஸ்டேட் சுரப்பி

    தைராய்டு, புரோஸ்டேட் சுரப்பிகளை தூண்டிவிடுவதோடு, வயிற்றில் உள்ள உறுப்புகள் சீராக இயங்க உதவும். ஜீரணமாவதை மேம்படுத்தும். மாதவிடாய் நிற்கும் பெண்களின் அறிகுறிகளை நீக்க உதவும். உடல் எடையை குறைக்கும். ஆஸ்துமா மூக்கடைப்பு, மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள், குடல்வால்வு நோய், மலச்சிக்கல், குடல் இறக்கம் எனும் ஹிரணியா, சர்க்கரை வியாதி, வெரிக்கோய்வெயின் எனும் கால் நரம்பு முடிச்சு வியாதிகள், தூக்கமின்மை, குதிகால் வலி மற்றும் பாதம் சம்பந்தப்பட்ட நோய்களை விரைவில் குணம் செய்யும்.

    English summary
    Health Minister Ma Subramanian did Sarvangasana in Yoga and Naturopathy Hospital. here are the list of health benefits of asanas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X