ஜெயிலுக்கு போனால் ஏசியும், சோஃபாவுமா தருவாங்க?.. ஜெயக்குமாருக்கு அமைச்சர் மா.சு. கேள்வி!
சென்னை: சிறையில் போதிய வசதிகள் கிடைக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது சென்னை 49 ஆவது வார்டில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் கள்ள ஓட்டுப் போட்டதாக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
அப்போது அங்கிருந்த அதிமுகவினர் நரேஷ் மீது தாக்கினார். அப்போது அவர்களை விலக்கிவிட்ட ஜெயக்குமார், நரேஷை அரை நிர்வாணப்படுத்தி போலீஸிடம் ஒப்படைத்தார்.

ஜெயக்குமார் கைது
இதையடுத்து நரேஷின் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீஸார் கடந்த 21 ஆம் தேதி இரவு கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது இருவேறு வழக்குகள் பதியப்பட்டு ஜாமீனில் வெளியே வர முடியாத நிலை இருந்தது.

20 நாட்களுக்கு பிறகு ஜாமீன்
20 நாட்களுக்கு பிறகு அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அதன்படி கடந்த 12 ஆம் தேதி காலை ஜெயக்குமார் புழல் சிறையிலிருந்து விடுதலையானார். அவரை வரவேற்க சிறைக்கு வெளியே நிறைய ஆதரவாளர்கள் திரண்டு பட்டாசுகளை வெடித்து ஆரவாரமாக வரவேற்றனர். இதையடுத்து ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

3 மணி நேரம்
அப்போது அவர் கூறுகையில் கைது செய்யப்பட்டதும் 3 மணி நேரமாக என்னை காரில் வைத்து சென்னையை சுற்றிக் காட்டினார்கள். தீவிரவாதிகளை அடைக்கும் சிறையில் என்னை அடைத்திருந்தனர். அங்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை. பாய் இல்லை. இதனால் கட்டாந்தரையில் படுத்திருந்தேன் என்றார்.

மா சுப்பிரமணியன் பதில்
இதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் ஜெயிலுக்குச் சென்றவர்களுக்கு ஏசியும் சோஃபாவுமா கொடுப்பார்கள்? குற்றம் செய்தவர்கள் தவறை உணர வேண்டும் என்பதற்காகத்தான் தண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடி
இதெல்லாம் சுதந்திரத்திற்கு முன்னதான சிறைச்சாலை அனுபவங்கள். சும்மா வெளியே இருப்பவர்கள் சொல்லி பார்த்திருப்பார். வேண்டுமானால் அவர் கூட இருக்கும் 2 பேரை ஜெயிலுக்குச் சென்று பார்த்து வரச் சொல்லுங்கள் என மா சுப்பிரமணியன் விமர்சனம் செய்திருந்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனமும் அதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடியும் வைரலாகி வருகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications