குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும்.. கட் & ரைட்டாக சொன்ன மா.சுப்பிரமணியன்!
சென்னை: எதிர்காலத்தில் குட்கா, பான்பராக் போன்ற போதைப் பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் 7ஆம் ஆண்டு இளைஞர் நல விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "ஜப்பானில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை பற்றி கண்டறிந்து வர அரசு முறைப் பயணமாக எங்களை அனுப்பினார். அதன் விளைவாக, தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் தொடக்க நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனைக்கான தடை தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஒருசில கடைகளில் இன்னும் போதை வஸ்துக்கள் கிடைக்கிறது. எதிர்காலத்தில் குட்கா, பான்பராக் போன்ற போதைப் பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதித்து கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் பின்னர் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதித்து, உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்ததுடன், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடை செய்வதற்கு புதிதாக அரசாணை வெளியிடவும் அனுமதியளித்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நிக்கோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் ஓராண்டுக்கு தடை விதித்து கடந்த மே மாதம் உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்தார்.
போதைப் பொருட்கள் விற்பனைக்கு தடை ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் மே மாதத்துடன் இந்த தடை முடிவுக்கு வரும். அப்போதே, உடனடியாக அந்த தடை நீட்டிக்கப்படும். இந்நிலையில் தான் இதனை நிரந்தர தடையாக விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார் மா.சுப்பிரமணியன்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications