"அணில்" சிக்கிடுச்சு! நான் தான் ரிலீஸ் பண்ணிவிட்டேன்! மா சுப்பிரமணியன் போட்ட ட்வீட்! யாரை சொல்கிறார்
சென்னை: தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அவரது போஸ்ட் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகும். இதற்கிடையே அணிலைப் பிடித்துவிட்டதாக அவர் போட்ட போஸ்ட் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்கும் எனத் தெரிகிறது. இன்னும் 3, 4 மாதங்கள் மட்டுமே தேர்தலுக்கு இருப்பதால் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டது.. ஒரு பக்கம் கூட்டணி, சீட் பேரம் நடக்கும் நிலையில், இன்னொரு பக்கம் பிரச்சாரமும் ஆரம்பித்துவிட்டது.

திமுக
திமுகவைப் பொறுத்தவரை அக்கட்சி சார் பணிகளில் வாக்காளர்களைச் சேர்ப்பதில் உதவி வருகிறது. அதேபோல அக்கட்சியின் உள்ளூர் தலைவர்களும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். சமீபத்தில் தான் அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் பல்வேறு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டிருந்தார். பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
திமுகவின் கோட்டையாக அறியப்படும் சென்னையில் முக்கிய திமுக முகமாக இருப்பவர் மா சுப்பிரமணியன். சைதாப்பேட்டை எம்எல்ஏவான இவர், தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சராகவும் இருக்கிறார். அரசுப் பணிகளுக்கு நடுவே இவர் சமூக வலைத்தளங்களிலும் கூட ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது மாரத்தானில் ஓடுவது குறித்த தகவல்களையும் பகிர்ந்து வருவார். இதற்கிடையே அவர் இப்போது போட்ட ஒரு போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அணில்
அதில் அவர், "என் குளியலறையில் சிக்கி தவித்த அணிலை மீட்டெடுத்து சுதந்திரமாக உலவவிடப்பட்டது......" என போஸ்ட் செய்துள்ளார். மேலும், இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் வீட்டில் இருந்து அணிலை கையில் எடுத்துக் கொண்டு வருகிறார். வீட்டிற்கு அருகே செடிகள் இருக்கும் நிலையில், அதில் அவர் அணிலை விட்டுவிடுகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அவரது போஸ்ட்டிற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு தரப்பினர் அவர் வேண்டும் என்றே விஜய் பிரச்சாரத்திற்கு வந்த நாளில் இதுபோல நக்கலடிக்கும் வகையில் பதிவிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். மேலும், தவெகவினரும் கூட அவரது போஸ்ட்டிற்கு கீழ் இதற்குக் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு தேர்தல்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தற்போதைய சூழலில் அங்கு 3 முனைப் போட்டி ஏற்படுவது போலவே தெரிகிறது. வழக்கம் போல திமுக மற்றும் அதிமுக கூட்டணி களத்தில் இருக்கிறது. இது தவிர விஜய் தலைமையிலும் ஒரு கூட்டணி உருவாகும் எனத் தெரிகிறது. மேலும், வழக்கம் போலவே இந்தத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் எனத் தெரிகிறது.
கூட்டணி
இதில் திமுக கூட்டணி கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது போலவே தெரிகிறது. இன்னும் ஓரிரு கட்சிகள் திமுக கூட்டணியில் இணையலாம் எனத் தெரிகிறது. அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை பாஜக மட்டுமே பெரிய கட்சியாக இருக்கிறது. இதர கட்சிகளைக் கூட்டி வரும் முயற்சிகள் நடந்து வருகிறது. டிடிவி தினகரன், ஓபிஎஸ், தேமுதிக உள்ளிட்ட பல தரப்பினர் இன்னும் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்காமல் இருக்கிறார்கள். இதனால் அடுத்தாண்டு தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்றே தெரிகிறது.
-
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications