நீட் தற்கொலை.. பெற்றோர் அழுத்தம் கொடுப்பதாக கவுன்சிலிங்கில் மாணவர்கள் தகவல்.. அமைச்சர் மா.சு பேட்டி
சென்னை: பெற்றோர்கள் அழுத்தம் கொடுப்பதால் மன உளைச்சல் ஏற்படுவதாக கவுன்சலிங்கில் மாணவர்கள் கூறுகிறார்கள் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீட் தேர்வுக்கு பின், தேர்வு முடிவு வந்தப்பின் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க அரசு சார்பில் கவுன்சிலிங் வைக்கப்பட்டது. இதில் 21,756 மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
கவுன்சலிங்கின் போது பெற்றோர்கள் அழுத்தம் கொடுப்பதாக 5 ஆயிரம் மாணவர்கள் கூறியிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என அமைச்சர் மா.சு தெரிவித்து உங்கள் குழந்தைகளின் உயிருக்கு நீங்கள் தான் உத்தரவாதம்.

குறைந்த மதிப்பெண்
''நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் சேலத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டது பெரிய அளவில் வருத்தம் அளிக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாகத் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பிரதமரை முதல்வர் சந்தித்தபோதும், நான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை 3 முறை சந்தித்தபோதும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினோம். இதுவரை மத்திய அரசு நீட் தேர்வு பிரச்சினையில் முழுத் தீர்வு காணவில்லை.

தமிழகத்தில் எத்தனை பேர்
தமிழகத்தில் 1,10,971 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். நீட் தேர்வு எழுதியவுடன் மாணவர்களின் மன உளைச்சலைப் போக்கும் வகையில் 333 மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் மீண்டும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இதுவரை 21,756 மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video

2 ஆயிரம் மாணவர்கள்
முதல் இரு முறை பேசியபோது 2 ஆயிரம் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்தது கண்டறியப்பட்டு மீண்டும் மீண்டும் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு மரணம் மன வருத்தத்தை அளிக்கிறது. மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கண்டிப்பாக இது மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை உயிருக்கு
பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளின் உயிருக்கு நீங்கள்தான் முழு உத்தரவாதம். அவர்களுக்கு அழுத்தம் தராமல் இருப்பது பெற்றோர்களின் கடமை. கவுன்சிலிங்கின்போது பெற்றோர்கள் அழுத்தம் கொடுப்பதாக 5 ஆயிரம் மாணவர்கள் கூறியிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. குழந்தைகளும் பெற்றோர்களை நினைத்துப் பார்த்து, வாழ்ந்து, சாதித்துக் காட்ட வேண்டும்'' என்றார் அமைச்சர்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீட், சிபிஎஸ்இ குளறுபடிகள்! நாங்கள் நடத்துவது அமைதி போராட்டம்தான்! கரப்பான் பூச்சி கட்சி விளக்கம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications