Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

HMPV வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்யலாம்? எதை செய்யக் கூடாது? அமைச்சர் மா.சு.விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: HMPV வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அச்சப்பட தேவையில்லை. அந்த அளவுக்கு அது ஒன்றும் பெரிய வைரஸ் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் இருவருக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு இருந்தால் 3 முதல் 5 நாட்களில் சரியாகிவிடும். சளி போன்ற பாதிப்புகள்தான் இருக்கும். இது வீரியம் குறைந்த வைரஸ் என்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம். சென்னை, சேலத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட இருவரும் நலமாக இருக்கிறார்கள்.

hmpv virus ma subramanian tamil nadu

உலக சுகாதார மையம் எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்.

3 ஆண்டுகளுக்கு மேல் கொரோனா நீடித்தது. அதன் பிறகு குரங்கம்மை பாதிப்பு உலகம் முழுவதும் பரவியது. உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதனால் தமிழகத்தில் குரங்கம்மை பரவாமல் தடுக்கப்பட்டது.

மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் எச்எம்பிவி வைரஸுக்கு எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற வழிகாட்டும் நெறமுறைகள் நேற்று மாலை வரை வெளியிடப்படவில்லை. மத்திய அரசின் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

2001 ஆம் ஆண்டு முன்பு இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதற்கு முன்பே இது பரவியிருக்கும். உடல்நலம் பாதித்தவர்கள், எதிர்ப்பு சக்தி குன்றியவர்களுக்கு நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும். இனி உலகம் முழுவதும் மக்கள் இது போன்ற வைரஸ்களுடன் போராடித்தான் வாழ வேண்டியதுள்ளது. ஆனால் அந்த வைரஸ்கள் எப்படிப்பட்டவை என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியது அரசின் கடமை என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் வூகான் மாகாணத்தில் கொரோனா எனும் வைரஸ் பரவியது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக உலக மக்கள் பாதிக்கப்பட்டனர். பலர் உயிரை இழந்தனர், வேலையிழப்பு ஏற்பட்டது, உலக பொருளாதாரத்தில் சரிவு என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பிறகு தற்போது கட்டுக்குள் இருக்கிறது. இந்த நிலையில் சீனாவில் தற்போது ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் என்று அழைக்கப்படும் ஒரு வைரஸ் பரவி வருகிறது. இது குழந்தைகளை தாக்கி வருகிறது.

இந்தியாவிலும் அதன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இரு குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அது போல் தமிழகத்தில் சென்னையிலும் சேலத்திலும் என இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் பாதிப்பு ஆங்காங்கே பரவி வருவதால் இது ஒரு கொரோனாவை போல் இருக்குமா என மக்கள் அஞ்சியுள்ளனர். மேலும் சிலர் மீண்டும் லாக்டவுன் போட்டு விடுவார்களோ என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது.

இந்த நிலையில் இந்த வைரஸால் எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். சாதாரண காய்ச்சல், சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். இதற்கு பிரத்யேக சிகிச்சைகள் தேவையில்லை. ஆன்டி பயாடிக் மருந்துகளை டாக்டரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+