சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

183 தொகுதிகளில் மாலை முரசு சர்வே.. திமுக 117 இடங்களில் முன்னிலை, அதிமுக 43 இடங்களில் முன்னிலை!

Google Oneindia Tamil News

சென்னை: மாலை முரசு தொலைக்காட்சி இதுவரை 183 தொகுதிகளுக்கு முன்னிலை நிலவரத்தை கணித்து வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி 117இடங்களில் முன்னிலையில் உள்ளதாகவும், அதிமுக - 43 இடங்களில் முன்னிலையில உள்ளதாகவும், அமமுக ஒரு இடத்தில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், இழுபறியில் 22 தொகுதிகள் உள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது.

மாலைமுரசு தொலைக்காட்சி ஒவ்வொரு நாளும் 26 தொகுதிகளுக்கு கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் இன்றும் 26 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புமுடிவினை வெளியிட்டுள்ளது. இன்று, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கான நிலவரத்தை வெளியிட்டது.

இதில் பாலக்கோடு, ஊத்தக்கரை, ஜோலார்பேட்டையில் அதிமுகவும், பர்கூர், ஆம்பூர், வாணியம்பாடி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி மற்றும் கிருஷ்ணகிரியில் திமுகவும் முன்னிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பென்னாகரத்தில் சமபலம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் செம்ம பைட்

கடலூரில் செம்ம பைட்

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணிக்கே அதிக ஆதரவு உள்ளதாக மாலைமுரசு கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. எனினும் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சில தொகுகளில் அதிமுக முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டுள்ளது. சில தொகுதிகளில் திமுகவிற்கு அதிமுக கடும் போட்டி அளிக்கும் என கூறுகிறது.

கோவை ஈரோடு

கோவை ஈரோடு

இதனிடையே திருவாரூர், பாபநாசம், தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊர்களில் திமுகவே முன்னிலையில் இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் அதிமுக முன்னிலையில் இருந்தது. சேலம் மாவட்டத்திலும், கோவை, ஈரோடு,திருப்பீர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுகவே அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது.

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம்

தென்மாவட்டங்களில் பல இடங்களில் திமுகவே முன்னிலையில் உள்ளதாக கூறியிருந்தது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எல்லா தொகுதிகள், பெரியகுளம், கம்பம், மதுரை தெற்கு, மதுரை கிழக்கு உள்பட பல்வேறு தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளதாகவும், பரமக்குடி, சோழவந்தான், மதுரை தெற்கு உள்ளிட்ட ஒரு சில தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளதாகவும் மாலைமுரசு தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் தென்காசி மாவட்டத்தில் மட்டும் தொகுதிகளில் மட்டும் அதிமுக முன்னிலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது. கோவில்பட்டியில் அமமுக வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

43 இடங்களில் அதிமுக

43 இடங்களில் அதிமுக

மாலை முரசு தொலைக்காட்சி இன்றுடன் இதுவரை 183 தொகுதிகளுக்கு முன்னிலை நிலவரத்தை கணித்து வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி 117இடங்களில் முன்னிலையில் உள்ளதாகவும், அதிமுக - 43 இடங்களில் முன்னிலையில உள்ளதாகவும், அமமுக ஒரு இடத்தில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், இழுபறியில் 22 தொகுதிகள் உள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது.

English summary
maalai Murasu TV Survey 183 Constituency in tamil nadu till now: DMK leads in 117 places, AIADMK leads in 43 places
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X