"ஆபாச சாட்".. மாங்காடு மாணவிக்கு தொல்லை தந்த கல்லூரி மாணவர் போலீசாரால் கைது.. நடந்தது என்ன?
சென்னை: மாங்காட்டில் 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவர் மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாங்காடு மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. அந்த 11ஆம் வகுப்பு மாணவி நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதிய கடைசி கடிதத்தை நேற்று போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் அந்த மாணவியின் செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மாணவிக்கு பள்ளியிலோ அல்லது உறவினர்களிடம் இருந்தோ பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

வாட்ஸ் ஆப் சாட்
மாணவியின் போனில் இருந்த வாட்ஸ் ஆப் சாட்கள் அடிப்படையில் போலீசார் நேற்று முதல் நாளில் இருந்து இரண்டு இளைஞர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். அந்த 2 பேரின் செல்போன் சாட் அந்த மாணவியின் போனில் இருந்துள்ளது. அந்த மாணவியிடம் இரண்டு பேரும் செல்போனிலும், வாட்ஸ் ஆப்பிலும் அடிக்கடி பேசி தொல்லை கொடுத்துள்ளனர் என்று போலீஸ் தரப்பு நம்மிடம் தெரிவித்தது.இதை பற்றி நேற்றே நாம் Exclusive செய்தி வெளியிட்டு இருந்து இருந்தோம்.

இளைஞர்
அதில் ஒருவர் கல்லூரி இளைஞர். இன்னொருவர் 17 வயது மட்டுமே கொண்ட மைனர். இரண்டு பேரும் அந்த மாணவியிடம் போனில் சாட் செய்துள்ளனர். அதில் கல்லூரி இளைஞர் அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக அடிக்கடி ஆபாசமாக பேசி உள்ளார். இந்த சாட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

ஆபாசம்
அதோடு அந்த மாணவியை கல்லூரி இளைஞர் சாட்டில் அவ்வப்போது மிரட்டியும் வந்துள்ளார். இந்த நிலையில்தான் நேற்று முழுக்க அந்த கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் முடிவில் அந்த மாணவியின் தற்கொலைக்கு கல்லூரி மாணவரும் காரணமாக இருந்திருக்கலாம் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
Recommended Video

வழக்கு
இதையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர் மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications