முதல் மனைவியை தவிக்க விட்ட மாதம்பட்டி ரங்கராஜ்.. 2வது மனைவி கூடயும் சண்டை? இது பழைய போட்டோவா?
சென்னை: ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் பிரபல சமையல் கலை நிபுணரான மாதம்பட்டி ரங்கராஜுடன் திருமணம் நடைபெற்றதாக புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பிரபல ஆடை வடிவமைப்பு நிபுணரான ஜோய் கிரிசில்டா. இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜோய் கிரிசில்டா இடையே பிரச்சனை இருப்பதாகவும் இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது பகிர்ந்து உள்ளதாக கூறுகின்றனர். மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவரது முதல் மனைவியும் வழக்கறிஞருமான ஸ்ருதி வழக்கு தொடர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கோவை அருகே மாதம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இதே ஊரைச் சேர்ந்தவர் தான் நடிகர் சத்யராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது. சத்யராஜின் உண்மையான பெயரும் ரங்கராஜ் என்பதும் கவனிக்கத்தக்கது. அந்த வகையில் மாதம்பட்டியில் இருந்து சினிமா துறையில் இரண்டாவதாக நுழைந்தவர் ரங்கராஜ்.
மெஹந்தி சர்கஸ், பென்குயின் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றவர். சினிமாவில் நுழைந்தாலும் தனது அடையாளமாக சமையல் கலையை வைத்துக்கொண்டவர். அரசியல் திரை பிரபலங்களின் இல்ல விசேஷ நிகழ்ச்சிகளில் மாதம்பட்டி ரங்கராஜன் சமையல்தான். சென்னை தொடங்கி டெல்லி வரை பல பிரபலங்களின் வீட்டு விசேஷங்களை அலங்கரித்து இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.

சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு பெரும் கவனத்தைப் பெற்றுத் தந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான இரண்டு குக் வித் கோமாளி சீசன்களில் நடுவராக பங்கேற்றார். ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஸ்ருதி என்ற மனைவி இருக்கிறார். அவர் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு புரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜோய் கிரிசில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ் காதலில் இருப்பதாக தகவல் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாதம்பட்டி ரங்கராஜன் மனைவி நான் தான் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் ஸ்ருதி.
இதற்கிடையே திடீரென தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஜோய் கிரிசில்டா. முதல் மனைவி இருக்கும் போது மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்தது எப்படி? என்ற கேள்வியும் எழுந்தது. ஜோய் கிரிசில்டாவுக்கும் இது இரண்டாவது திருமணம் தான். 2018 ஆம் ஆண்டில் ஜோதிகா நடித்து வெளியான பொன் மகள் வந்தால் படத்தை இயக்கிய ஜேஜே.ஃப்ரடெரிக் தான் அவரது முதல் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் இடையே விவாகரத்து நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாவதாக மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
முதல் மனைவியான ஸ்ருதியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் விவாகரத்து பெறாத நிலையில் எவ்வாறு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும் என கேள்வி எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் வழக்கறிஞரான ஸ்ருதி மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளிக்க இருப்பதாகவும், முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே இரண்டாவது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் சிறை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் அதிர வைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பல நாட்களுக்கு முன்பே ஜோய் கிரிசில்டாக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் நடைபெற்றதாகவும் தற்போது இருவருக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில்தான் பழைய புகைப்படங்களை ஜோய் கிரிசில்டா வெளியிட்டு இருக்கிறார் என்கின்றனர். இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications