டெட்ரா பேக்கில் 90 மில்லியுடன் வாட்டர் மிக்ஸ் செய்யுங்கள்.. அமைச்சருக்கு தங்க மோதிரம் பரிசாம்!
சென்னை: கலப்படத்தை தடுக்க டெட்ரா பாக்குகளில் டாஸ்மாக் மதுபானத்தை வழங்க தமிழக அரசு ஆலோசித்து வரும் நிலையில் இதை அறிவித்த அமைச்சர் முத்துசாமி முக்கால்பவுன் மோதிரம் பரிசாக கொடுப்பதாக மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என பாட்டிலில் சிறிய எழுத்துகளில் எழுதி வைத்திருந்தாலும் குடிமகன்கள் அதை குடிக்காமல் விடுவதில்லை. ஒரு முறை ருசி கண்டுவிட்டால் அன்றாடம் கணக்கு வழக்கு இல்லாமல் புல் பாட்டிலை இறக்குவோரும் இருக்கிறார்கள்.

இதனால் பல குடும்பங்கள் ஆதரவற்று கிடக்கின்றன. சிறிய வயதில் கணவனை இழந்து பூ பொட்டில்லாமல் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். அது போல் குழந்தைகளும் விளையாட வேண்டிய வயதில் அப்பாவை இழந்துவிட்டு தவிக்கிறார்கள்.
இதனால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூகநல ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் கேட்டு வருகிறார்கள். ஆனால் மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் தலைத்தூக்கும், இல்லாவிட்டால் அண்டை மாநிலத்திற்கு சென்றாவது கள்ளச்சாராயம் குடிப்பதை வழக்கமாக்கி கொள்வர்.
இதனால் இறப்புகள் ஏற்படும். தஞ்சை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் அரசு மதுபான கடையில் மது குடித்த 4 பேர் மர்மமான முறையில் இறந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைட் எனும் நஞ்சு கலக்கப்பட்டிருந்ததே மரணத்திற்கு காரணம் என தெரியவந்தது.
இதையடுத்து அரசு விற்பனைசெய்யும் டாஸ்மாக் மதுபானத்தில் சயனைட் கலந்தது எப்படி? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. மேலும் மதுக்கடைகளில் விற்பனையாகும் மதுவின் பாதுகாப்பை உறுசி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

போலி மதுபானம், மதுவில் கலப்படம் செய்வது உள்ளிட்ட பிரச்சினைகளைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வருகிறது. அந்த வகையில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் டெட்ரா பாக்கெட் எனும் காகித பெட்டிகளில் மதுவை வழங்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மதுபானத்தை டெட்ரா பாக்கெட்டுகளில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும்என மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் மதுபாட்டில்களை டெட்ரா பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்தால் மறுசுழற்சி செய்யும் போது விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் என தெரிவித்திருந்தார். 90 மில்லி மதுபானத்தை காகித குடுவையில் கொடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் முத்துசாமிக்கு முக்கால் பவுன் மோதிரம் பரிசாக வழங்கப்படும் என மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மில்லி டாஸ்மாக் மதுபானத்தில் தேவையான அளவு தண்ணீர் கலந்து ... ஒரே பாக்கெட்டாக விற்பனை செய்ய வேண்டும்.
டெட்ரா பாக்கெட்டாக மது விற்பனை செய்வதால் பிளாஸ்டிக் டம்ளர், வாட்டர் பாட்டில் வாங்குவது பார்களில் குறையும். அதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். ஒரே பாக்கெட்டில் ஒரே மடக் மடக் இதை அமல்படுத்தினால் அமைச்சருக்கு முக்கால் பவுன் மோதிரம் பரிசாக சங்கம் சார்பில் வழங்கப்படும் என செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications