Madras Day 2025: சென்னை வெறும் ஊரல்ல.. தமிழ்நாட்டின் இதயத் துடிப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 386 ஆவது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை வெறும் ஊரல்ல. தமிழ்நாட்டின் இதயத் துடிப்பு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை இந்தியாவின் 4 ஆவது பெரிய நகரமாகும். ஆரம்பகால கட்டத்தின் சென்னை, மதராசபட்டணம் என்று அவைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் தங்களது வர்த்தகத்துக்காக ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து, பின்னர் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினர்.

chennai day mk stalin chennai

அன்றைய சமயத்தில் முக்கிய வர்த்தக மையமாக சென்னை இருந்து வந்தது. பின்னர், 1966 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதியால் மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என மாற்றப்பட்டது.

சென்னையின் சிறப்பம்சங்கள்: 1644 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்தக் கோட்டை தற்போது வரை சட்டப் பேரவையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நீண்ட கடற்கரையோரத்தைக் கொண்ட மெரினா கடற்கரை தான். சென்னையில் மிகவும் பிரபலமான பகுதிகளில் ஒன்றாக மெரினா விளங்கி வருகிறது.

சென்னைக்கு மற்றுமொரு சிறப்பு என்றால் ரிப்பன் பில்டிங் தான். இந்த சாரா செனிக் பாணியில் காண்போரைக் கவரும் வகையில் வெள்ளை நிறக் கட்டடம் அமைந்திருக்கும். இந்த கட்டடத்திந் முதல் மாடியே 25 ஆயிரம் சதுர அடியை கொண்டது. ரிப்பன் பில்டிக்கை கட்டி முடிக்க நான்கு ஆண்டுகளாகின. சென்னை மாநகராட்சி அலுவலகம் இந்தக் கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது.

சென்னையில் அதிக அளவிலான கோயில்கள் உள்ளன. ஐடி தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் இங்கு நிறைந்துள்ளன. கல்வி, மருத்துவம், தொழில், ஐடி துறை, பொழுதுபோக்கு, அரசியல் என அனைத்து வகையிலும் சென்னை சிறப்பு பெற்றதாகும். இங்கு வேலை, தொழில், கல்வி, மருத்துவம் என பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு மொழி, கலாச்சாரம், பண்பாடு கொண்ட கோடிக்கணக்கிலான மக்கள் சென்னையில் வாழ்ந்து வருகின்றனர்.

வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்று அழைக்கப்படும் சென்னை 386 ஆவது தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை தினத்தையொட்டி முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:
எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ

மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!... சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் சென்னை என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+