Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெட்ராஸ் 382: 150 குண்டுகள்.. ஜெர்மனியின் "எம்டன்" ஆடிய ஆட்டம்.. மெரினா வரை நீண்ட முதல் உலகப்போர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 382 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் மெட்ராஸ் என்னும் மாபெரும் நகரம் வங்ககடல் எல்லையில் உருவாக்கப்பட்டது. இப்போது உலகின் முன்னணி நகரங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் நம்ம சென்னை சுனாமி உட்பட பல இயற்கை பேரிடர்கள், போராட்டங்கள், அரசியல் எழுச்சிகளை சந்தித்து இருக்கிறது.. ஏன் உலகப்போரை கூட சென்னை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறது.

Recommended Video

    Madras Day : Chennai-ல் இதுவரை கொண்டுவரப்பட்ட சிறந்த திட்டங்கள்

    ஆம், முதல் உலகப்போரை நேரடியாக எதிர்கொண்ட இந்தியாவின் ஒரே நகரம் சென்னைதான். 107 ஆண்டுகளுக்கு முன் முதல் உலகப்போர் நடந்த சமயத்தில் சென்னையிலும் மோதல்கள் நிகழ்ந்தன. ஜெர்மனி ஆதரவு மைய நாடுகளுக்கும் நேச நாடுகளுக்கும் நடைபெற்ற இந்த போரில் சென்னையின் கடல் பகுதிகளிலும் குண்டுகள் வீசப்பட்டன.

    1914ல் இந்த போர் நடந்த போது இந்தியாவில் சுதந்திர வேட்கை உச்சத்தில் இருந்தது. முக்கியமாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒவ்வொரு தமிழரும் சாலையில் இறங்கி போராடி வந்தனர். ஆங்கிலேயர்களை வீட்டுக்கு அனுப்ப எந்த தியாகத்தையும் செய்யும் அளவிற்கும், எவ்வளவு தூரத்திற்கும் செல்லும் அளவிற்கு தமிழர்கள் போராடி வந்தனர்.

     போராட்டம்

    போராட்டம்

    அந்த போரை ஜெர்மனி, ஆஸ்திரியா, பல்கேரியா, ஓட்டமன் நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மைய சக்திகளாக திரண்டு வந்து போரிட்டன. நேச நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளை எதிர்கொண்டு ஜெர்மனி படை மோதியது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்ததால் மக்கள் பலரும் ஜெர்மனி படைகளுக்கு முதல் உலகப்போரில் தீவிர ஆதரவு அளித்து வந்தனர். முதல் உலகப்போரில் இங்கிலாந்து வீழ்ந்தால் நமக்கும் விடுதலை கிடைக்கும் என்ற வேட்கை அது. இதன் காரணமாகவே சென்னைக்கும் போர் நீண்டது.

    சென்னை

    சென்னை

    அப்போதைய மெட்ராஸ் இங்கிலாந்து ஆட்சி அதிகாரத்தின் முக்கியமான பகுதியாக பார்க்கப்பட்டது. இங்கிலாந்தின் முக்கிய தலைவர்கள், ஆளுநர்கள் வசித்து வந்த மிக முக்கியமான நகரமாக மெட்ராஸ் இருந்தது. இதனால் ஜெர்மனி படைகள் முதல் உலகப்போரில் மெட்ராசை குறி வைத்தது. இங்கு இருக்கும் இங்கிலாந்து கட்டுமானங்களையும், இங்கிலாந்து படைகளையும் வீழ்த்தும் வகையில் மெட்ராஸை நோக்கி ஜெர்மனி படைகள் திரண்டு வந்தன. சென்னையில் இருக்கும் இங்கிலாந்து கட்டுமானங்களை வீழ்த்துவதற்காக களமிறங்கிய கப்பல்தான் எம்டன் கப்பல்.

    உலகப் போர்

    உலகப் போர்

    முதல் உலகப்போரில் மிக தீவிரமான கப்பல், அதி சக்தி வாய்ந்தது என்று கருதப்பட்டதுதான் எஸ்.எம்.எஸ். எம்டன் கப்பல். ஜெர்மனி வீரர்கள், பல்வேறு மைய நாட்டு வீரர்களுடன் 200க்கும் அதிகமான குண்டுகளோடு இந்த கப்பல் சென்னை எல்லை வரை வந்தது. கேப்டன் வான் முல்லர் தலைமையில் வந்த இந்த கப்பலில்தான் தமிழ்நாட்டு சுதந்திர வீரர் செண்பகராமனும் இடம்பெற்று இருந்தார். இந்தியாவை இங்கிலாந்து ஆதிக்கத்தில் இருந்து மீட்டு சுதந்திரத்தை கொண்டு வருவதற்காக எம்டன் கப்பலை நம் எல்லை வரை கொண்டு வந்த தீர்க்கமான போராட்டத்தை செய்தது செண்பகராமன்தான்.

    குண்டுகள்

    குண்டுகள்

    இங்கிலாந்து படைக்கு எதிராக ஜெர்மனியின் எம்டன் வங்க கடலில் அன்று ஆடியது கெட்ட ஆட்டம். சினிமா படங்களில் கூட பார்க்க முடியாத அளவிற்கு எம்டன் கப்பல் சென்னை எல்லையில் குண்டுகளை வீசி போர் புரிந்தது. வரிசையாக அடுத்தடுத்து 150க்கும் அதிகமான ஷெல் குண்டுகளை வீசி சரமாரியான தாக்குதல்களை எம்டன் நிகழ்த்தியது. எம்டன் நிகழ்த்திய இந்த சரமாரி தாக்குதல்களை இங்கிலாந்து கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

     சென்னை

    சென்னை

    மெட்ராஸின் வங்க கடல் எல்லையில் அன்று கடல் அலைக்கு பதிலாக குண்டு மழைதான் பொழிந்தது. இப்போது இருக்கும் சென்னை ஹைகோர்ட் வளாகம் உட்பட பல்வேறு இடங்கள் சரமாரி தாக்குதலுக்கு உள்ளானது. முக்கியமாக கலங்கரை விளக்கத்திற்கு அருகில் மிக மோசமாக குண்டு போடப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 150க்கும் அதிகமான குண்டுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் இப்போதும் சென்னை ஹைகோர்ட்டில் இதற்கான நினைவு சின்னங்கள் இருக்கின்றன.

    சேதங்கள்

    சேதங்கள்

    இந்த போரில் வெடித்த குண்டுகளின் பாகங்கள் இப்போதும் வங்க கடல் அருகில் மூழ்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த போரில் நேச நாடுகளுக்கு தண்ணி காட்டிய எம்டன் கப்பல் அதே வருட கடைசியில் ஆஸ்திரேலியாவில் வீழ்த்தப்பட்டது. அதன்பின் 1918ல் ஜெர்மனி படைகளும் போரில் வீழ்ந்து சரண் அடைந்தது. முதல் உலகப்போர் சென்னை வரை நீண்ட நிலையில்.. 1914ல் சென்னை கடலோர பகுதிகள் தினம் தினம் பதற்றத்தோடு காணப்பட்டது.

    எம்டன் கப்பல்

    எம்டன் கப்பல்

    எம்டனின் அந்த மோசமான தாக்குதலால்தான் இப்போது திடமாக, உறுதியாக பேசும் நபர்களை, கண்டிப்புடன் இருப்பவர்களை எம்டன் என்று அழைக்கும் வழக்கம் தமிழில் இருக்கிறது. எம்டன் மகன் பட தலைப்பும் இதே காரணத்திற்காக வைக்கப்பட்டதுதான். அப்போது எம்டன் கப்பல் தாக்கிய விதத்தை வைத்து பார்த்தால் சென்னை என்ற நகரமே எதிர்காலத்தில் இருக்காது என்றுதான் கருதப்பட்டது. அந்த அளவிற்கு மோசமான குண்டுகள் சென்னை மீது வீசப்பட்டது. அதிலும் போரின் தொடக்கத்தில் ஜெர்மனி கை ஓங்கி இருந்தது.

    ஜெர்மனி

    ஜெர்மனி

    இதனால் சென்னையை எம்டன் கப்பல் லேசில் விடாது என்றே கருதப்பட்டது. ஆனால் 150 குண்டுகளை வீசிய பின் மேற்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தாமல் எம்டன் கப்பல் திரும்பி சென்றது. அந்த போரையும் எதிர்கொண்டு அதன்பின் பல புயல்கள், சுனாமிகளையும் எதிர்கொண்டு கெத்தாக மெட்ராஸ் உயர்ந்து நிற்கிறது. இப்போதும் அந்த போருக்கான நினைவு சின்னங்களும், வெடிக்காமல் போன குண்டுகளும் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+