மெட்ராஸ் டே 385: இந்தியாவை அளக்க அஸ்திவாரமிட்ட சென்னை! செயின்ட் தாமஸ் மவுண்ட் வரலாறு தெரியுமா?
சென்னை: இந்தியாவின் மிக முக்கிய நகரமாக இருக்கும் சென்னையின் வரலாறு, 16ம் நூற்றாண்டில் தொடங்கியது. சென்னைக்கு என பல்வேறு வரலாற்று பெருமைகள் இருக்கின்றன. ஆனால் சென்னையால் இந்தியாவுக்கே பெருமை என்றால், அது பரங்கிமலை எனப்படும் செயின்ட் தாமஸ் மவுண்ட்தான். 'மெட்ராஸ் டே 385' இன்று கொண்டாடப்படும் நிலையில், இது குறித்த தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது இந்த கதை இப்படித்தான் தொடங்குகிறது. உலகத்திற்கும், இந்த மனித சமூகத்திற்கும் நன்மை தரும் செயல் எதுவெனில் அது ஊர் சுற்றுவதுதான். இதுவரை நாம் பெற்றிருக்கும் அறிவு தகவல்கள் ஊர் சுற்றிகளின் அனுபவ களஞ்சியத்திலிருந்துதான் பெறப்பட்டிருக்கிறது. புத்தர், இயேசு, ஆதிசங்கரர் என மதத் தலைவர்களாக இருந்தாலும் சரி, சார்லஸ் டார்வின் போன்ற அறிவியலாளர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அத்துனை பேரும் மகா ஊர் சுற்றிகளே.

இப்படியான பிரிட்டிஷ் ஊர் சுற்றி குழு ஒன்று, இந்தியா முழுவதும் பயணித்து, இந்தியாவை அளந்து, உலகின் மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட் என்பதையும் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறது.
மைசூர் போரில் திப்பு சுல்தானை வெற்றிக்கொண்ட பின்னர் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஏறத்தாழ முழுமையாக தானதாக்கியிருந்தது. ஆனால் இந்திய துணைகண்டத்தின் நிலப்பரப்பு ஆங்கிலேயர்களை அச்சுறுத்தியது. பாலைவனம், சமவெளி, மழைக்காடுகள், பனி படர்ந்த பகுதிகள் என அவர்களை இந்நிலப்பரப்பு சுழற்றியடித்தது. எனவே முதல் பணியாக இந்தியாவின் நிலப்பரப்பை சரியாக புரிந்துக்கொள்வதென அவர்கள் முடிவெடுத்தார்கள். இதற்காக ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்தார்கள். அவர்தான் மகா ஊர்சுற்றி வில்லியம் லாம்டன்.
எங்கு போனாலும் புதிய நிலப்பரப்பில் சாவகாசமாக ரவுண்டு அடித்து, அதன் தன்மையை உணர்ந்து கொள்வதில் லாம்டன் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். இதுவே அவரை சிறந்த ஊர்சுற்றியாகவும், நில அளவையாளராகவும் மாற்றியது. இப்படிதான் இந்தியாவையும் அளக்க முடிவெடுத்து அதற்கான பணியை சென்னையிலிருந்து தொடங்கினார்.
இது ஒரு முக்கோண அளவியல் முறை. அதாவது பரங்கிமலையிலிருந்து நேராக 45 டிகிரி கோணத்தில் இரண்டு கற்பனை கோடுகளை போட வேண்டும். பின்னர் இந்த கோடுகளை இணைக்க மூன்றாது கோடு போட வேண்டும். இப்படி மூன்று கோடுகளையும் இணைத்தால் முக்கோணம் வரும். இதனை கொண்டு அந்த பகுதியின் நீளம் எவ்வளவு? மலைகளின் உயரம் என்ன? என்பது போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள முடியும். இதை வைத்துதான் இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் அளவிட்டார்கள்.

இந்த அளவீடுகளின் இறுதியில் எவரெஸ்ட் சிகரம்தான் உலகின் மிகப்பெரியது என்பதையும் அவர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த பெருமைக்கு அடித்தளமிட்டது சென்னைதான்.
இன்று நவீன இந்தியாவின் ஜீரோ பாயிண்ட் எது என கேட்டால் நாக்பூர் என எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் 1800களில் இந்தியாவின் ஜீரோ பாயிண்டாக தமிழ்நாடு இருந்தது. அதுவும் சென்னையில்தான் இந்தியாவின் முதல் மைல் கல் நடப்பட்டது. 1802ல் சென்னையின் பரங்கிமலை எனப்படும் செயின்ட் தாமஸ் குன்றில்தான் இந்த மைல்கல் நடப்பட்டது.
ஆங்கிலேயர் வருகைக்கு பின்னர் சென்னப்பட்டனம், மெட்ராஸாக மாறியிருந்தது. இந்த மெட்ராஸ் உருவாகி இன்று 385 ஆண்டுகள் ஆகின்றன. அந்த வகையில் இன்று மெட்ராஸின் வரலாற்றையும் நினைவுகூர்வோம்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications