பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீதான வழக்கு.. மறுவிசாரணைக்கு உகந்ததா? சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி
சென்னை: திருப்பூர் மாவட்டம், ஆதியூர் பிரிவு மேம்பாலம் அருகே கடந்த 2016-ம் ஆண்டு விபத்து நடந்து. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் ஜெயராமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மறுவிசாரணை கேட்டு புகழேந்தி தாக்கல் செய்த மனு, மறு விசாரணைக்கு உகந்ததா என சென்னை ஐகோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 4-ந்தேதி திருப்பூர் மாவட்டம், ஆதியூர் பிரிவு மேம்பாலம் அருகே கார் விபத்து நடந்தது. அந்த காரில் பயணித்த வீர சுரேகா என்ற பெண் உயிரிழந்தார். காரை ஓட்டிச் சென்று இந்த விபத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் ஜெயராமனுக்கு எதிராக வழக்கு வினாசி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் ஜெயராமனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2024-ம் ஆண்டு அவினாசி நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் பிரவீன் ஜெயராமன் தொடர்பாக வழக்கை போலீசார் சரிவர விசாரிக்கவில்லை. அதனால், இந்த விபத்து வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கிற்கு பதில் அளிக்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் ஆஜராக கூடுதல் குற்றவியல் வக்கீல் கே.எம்.டி.முகிலன், "இது விபத்து அல்ல. கொலை என்பது போல மனுதாரர் (புகழேந்தி) புகார் மனு கொடுத்துள்ளார்" என்றார்.
பிரவீன் ஜெயராமன் சார்பில் ஆஜரான வக்கீல் டி.சண்முகராஜேஷ்வரன், "இந்த மனுவில் பிரவீன் ஜெயராமனை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை. சேர்த்திருந்தால் உரிய விளக்கத்தை அளித்திருப்பார். இந்த விபத்தில் மனுதாரர் புகழேந்தி பாதிக்கப்பட்டவரோ, சாட்சியோ கிடையாது. அதனால், இந்த மனுவை தாக்கல் செய்ய அவருக்கு அடிப்படை உரிமையே இல்லை" என்று வாதிட்டார்.
தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, "2016-ம் ஆண்டு நடந்த விபத்தில் மது போதையில் காரை ஓட்டினாரா? என்று இப்போது கண்டுபிடிக்கும்படி மனுதாரர் கோருகிறார். இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது ஆகும்?" என்று கேள்வி எழுப்பினார். பின்னர் விசாரணையை வருகிற 6-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
லால்குடியில் களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவை பரிசு மழையில் நனைய வைத்த லீமா ரோஸ்! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
இரவோடு இரவாக ட்விஸ்ட்.. திமுக, அதிமுகவுக்கு 3ம் சக்தி செக்? முதல்வர் நாற்காலியில் அமரப்போவது இவரா? -
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications