Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு- ’சூமோட்டா’ விசாரணை- இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிக்கும் நீதிபதி யார் என்பது இன்று தெரியவரும். இந்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் எந்த நீதிபதி விசாரிக்க வேண்டு என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று தெரிவிக்கக் கூடும் என்பது எதிர்பார்ப்பு.

தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி உள்ளிட்டோர் பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் விடுதலை செய்த வழக்குகளின் தீர்ப்பை மறு ஆய்வு செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார்.

Madras HC Chief Justice to decide Judge Name in suo motu cases against TN ministers

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இத்தகைய மறு ஆய்வு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் அனுமதி நீதிபதி ஆனந்த் வெங்கடெஷ் பெற்றுள்ளாரா? இல்லையா? என பதில் மனுத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியை பெறுவதற்கு முன்னதாகவே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு விசாரணையை தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹெச் ராய், பி.கே.மிஸ்ரா பெஞ்ச் முன்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தரப்பு தாக்கல் செய்த பதில் மனுவில், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க முன் அனுமதி கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ந் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார். இக்கடிதத்தை ஆகஸ்ட் 23-ந் தேதி பதிவாளர் அலுவலகம், தலைமை நீதிபதிக்கு அனுப்பியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி தலைமை நீதிபதி இக்கடிதத்தைப் பார்த்தார். ஆனால் தலைமை நீதிபதி இந்த கடிதத்தைப் பார்க்கும் முன்னரே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தமது விசாரணையையும் தொடங்கிவிட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, நீதிபதிகளுக்கான வழக்குகளை தலைமை நீதிபதிதான் ஒதுக்க வேண்டும். ஆனால் தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்கும் வரை ஏன் தனிநீதிபதி ஆனந்த் வெங்கடேஷால் பொறுத்திருக்க முடியவில்லை? தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்குகளுக்கான நடைமுறைகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முறையாக பின்பற்றவில்லை. நடைமுறைகளை முறையாக பின்பற்றாத நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளும் செல்லத்தக்கவையாக இருக்காது என்ற விதிமுறைகள் இருக்கின்றன. தனிநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஏன் இந்த வழக்குகளை அவசரம் அவசரமாக விசாரித்தார்? என கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை யார் விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி முடிவெடுப்பதுதான் சிறந்ததாகும். எந்த நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்? அல்லது தலைமை நீதிபதியே விசாரிக்கலாமா? என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து விசாரிப்பாரா? அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றப்படுமா? என்பதை தலைமை நீதிபதி முடிவெடுத்து தெரிவிப்பார் என்பது எதிர்பார்ப்பு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+