வாரிசு சான்றிதழ்.. தத்தெடுக்கப்பட்ட பெண் வழக்கு.. வேளச்சேரி தாசில்தாருக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: தத்து எடுத்தவர்களின் வாரிசு என்று சான்றிதழ் கேட்ட நித்யா என்ற பெண்ணின் விண்ணப்பத்தை 6 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வேளச்சேரி தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தாசில்தாரிடம் முறையான ஆவணங்களை வழங்காததன் காரணமே சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று தாசில்தார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் குழந்தைகளைத் தத்தெடுப்பது என்பது, மத்திய அரசின் மத்திய தத்தெடுப்பு ஆதார ஆணையம் (Central Adoption Resource Authority - CARA) மற்றும் இளைஞர் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 (Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015) ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறது. தத்துவிதிகள் சற்று கடினமாகவே இப்போது உள்ளது. ஆனால் முன்பு அப்படி இல்லை.. அதனால் அந்த காலத்தில் தத்து பெறப்பபட்ட குழந்தைகள் வாரிசு சான்றிதழ் வாங்க நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளது.

தத்து பெறப்பட்ட குழந்தைகள் வாரிசு சான்றிதழ் வாங்க தத்து ஆணையின் நகல் தர வேண்டும். இது மிகவும் முக்கியமான ஆவணம் ஆகும். நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தத்து ஆணை (Adoption Deed/Order) தான், குழந்தையை சட்டபூர்வமாக தத்தெடுத்ததற்கான அதிகாரபூர்வ சான்றாகும். இது இருந்தால் தான் தத்து குழந்தைகள் வாரிசு சான்றிதழ் வாங்கவே முடியும்.
அதேபோல் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு இறந்த நபரின் இறப்புச் சான்றிதழ் கட்டாயம் வேண்டும். அதேபோல் விண்ணப்பதாரரின் அடையாள மற்றும் முகவரிச் சான்றாக, அவர்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஏதேனும் ஒரு அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று தர வேண்டும். தத்து குழந்தையின் பிறப்புச் பிறப்புச் சான்றிதழில் வளர்ப்புப் பெற்றோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டியது அவசியம் ஆகும். குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) போன்ற ஆவணங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உறவு முறையை நிரூபிக்க உதவும் என்பதால் அதுவும் வேண்டும்.
இவை இல்லாமல் சுய உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) வேண்டும். இது ஒரு நீதித்துறை அல்லாத முத்திரைத்தாளில் (Non-judicial Stamp paper) விண்ணப்பதாரர் அளிக்கும் ஒரு உறுதிமொழிப் பத்திரம் ஆகும். இதில், தாங்கள் வழங்கிய தகவல்கள் அனைத்தும் உண்மை என உறுதி செய்ய வேண்டும்.இவை அனைத்தும் இருந்தால் தான் தத்து குழந்தைகள் வாரிசு சான்றிதழ் பெறுவார்கள்.இதுதான் தற்போது நடைமுறையாகும். சென்னையில் தத்து குழந்தையான நித்யா என்பவர் வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பார்ப்போம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், சி.நித்யா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறுகையில், "செங்கல் ராவ்-சாந்தி ஆகியோருக்கு 1990-ம் ஆண்டு நான் மகளாக பிறந்தேன். 1996-ம் ஆண்டு என் தந்தை இறந்துவிட்டார். இதையடுத்து ராதாகிருஷ்ணன்-சரோஜா தம்பதி என்னை தத்து எடுத்துக் கொண்டார்கள். இந்தநிலையில், ராதாகிருஷ்ணன் 2021-ம் ஆண்டும், சரோஜா 2022-ம் ஆண்டும் இறந்து விட்டார்கள். இதையடுத்து, இவர்களது சட்டப்பூர்வமான வாரிசு என்று சான்றிதழ் கேட்டு வேளச்சேரி தாசில்தாரிடம் கொடுத்த மனு அளித்தேன். ஆனால் விசாரணைக்கூட நடத்தாமல் வேளச்சேரி தாசில்தார் நிராகரித்துவிட்டார் என்று மனுதாரர் நித்யா குற்றம்சாட்டினார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றநீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன் வாதிடுகையில், "மனுதாரர் ஆதாரம் எதுவும் கொடுக்கவில்லை, அவரது விண்ணப்பம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதே தவிர, நிராகரிக்கவில்லை" என்று வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.பி.சொக்கலிங்கம் ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், "மனுதாரர் தாசில்தாரிடம் பிரமாண மனுவுடன், ஆதார ஆவணங்களையும் தாக்கல் செய்து வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். அதன் மீது தாசில்தார் விசாரணை நடத்த வேண்டும். அதில் திருப்தி அடைந்தால், 6 வாரத்துக்குள் வாரிசு சான்றிதழ் வழங்கவேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்தார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications