பெங்களூரு புகழேந்தி வழக்கு: ஓபிஎஸ், எடப்பாடி நாளை நேரில் ஆஜராக விலக்கு அளித்தது ஹைகோர்ட்!
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி அக்கட்சியில் இருந்து ஜூன் 14-ந் தேதி நீக்கப்பட்டார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை மூலம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி பெங்களூரு புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நாளை (செப்டம்பர் 14) நேரில் ஆஜராக ஒ. பி.எஸ் - இ.பி.எஸ் க்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஹைகோர்ட்டில் வழக்கு
இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே தாக்கல் செய்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நிர்வாகிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஏராளமான புகார்களின் அடிப்படையிலும், புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், அதற்கு கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். தவறு செய்த ஒரு ஊழியரை நீக்கியதற்காக ஒரு தனியார் நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், அப்படி யாராவது அவதூறு வழக்கு தொடர முடியுமென்றால் ஆயிரக்கணக்கான அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் என தெரிவித்தார் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஒருவர் நீக்கப்பட்டது குறித்து தெரிவிக்க வேண்டியது கடமை என்ற அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவித்த அவர், இதில் அவதூறுக்கு என்ன முகாந்திரம் உள்ளதென கேள்வி எழுப்பினார்

பொதுவான சொற்கள்தான்
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் ஏ. நடராஜன், புகாரில் அவதூறுக்கான எந்த சாரம்சமும் இல்லை எனவும், கட்சியின் விதிகளை பின்பற்றாத உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கட்சியில் இருந்து நீக்கவும் தலைமைக்கு முழு அதிகாரம் உள்ளதென தெரிவித்திருந்தார். கட்சியில் இருக்கும் ஒருவரை புகாரின் அடிப்படையில் கட்சியை விட்டு நீக்கினால் அது அவதூறாகுமா என கேள்வி எழுப்பியிருந்த அவர், புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்குவது முதல் முறையல்ல எனவும், கடந்த 2017 ல் ஏற்கனவே ஒரு முறை கட்சியில் இருந்து நீக்கிய போதும் இதே போன்ற வாரத்தைகளை பயன்படுத்திதான் அறிக்கை வெளியிடப்பட்டதாகவும், எந்த கட்சியும் ஒருவரை நீக்கினால் இதே போன்ற வாரத்தையை தான் பயன்படுத்தும் எனவும் தெரிவித்திருந்தார்

அசிங்கப்படுத்திட்டாங்க..
இன்று புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத், தன்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை எனவும், பதில் அளிக்க வாய்ப்பு வழங்கப்படாமல், காரணமின்றி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். ஒ.பி.எஸ் - இ.பி. எஸ் வெளியிட்ட அறிக்கையில், விடுவிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், நீக்கம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளதாகவும்,இதில் அவதூறு வழக்குக்கு முகாந்திரம் உள்ளதாகவும் எடுத்துரைத்தார். இந்த அறிவிப்பால் தனது மானம்,மரியாதை,கவுரவம் போய்விட்டதாகவும், சொந்த கட்சிக்காரர், மாற்றுக் கட்சியினர், உறவினர்கள் என யாரும் தன்னை மதிப்பதில்லை எனவும், தன்னை அசிங்கப் படுத்தியுள்ளதாகவும், தவறு செய்து விட்டீர்களா என மற்றவர் கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், இதில் அவதூறு உள்ளதா இல்லையா என்பதை கீழமை நீதமன்ற விசாரணையில் தான் முடிவெடுக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு
அனைத்து தரப்பு வாதங்களை தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நீதிபதி, அதுவரை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் க்கு விலக்களித்து உத்தரவிட்டுள்ளார். தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது வேறு தேதியில் தள்ளிவைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தி உள்ளார்.
-
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications