ரூ4800 கோடி ஊழல்- எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை: ஹைகோர்ட் அதிரடி!
சென்னை: ரூ4,800 கோடி நெடுஞ்சாலை துறை டெண்டர் ஊழல் முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் நெடுஞ்சாலை துறை ஊழல் வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது அடுத்த கட்ட நடவடிக்கைகள் பாயும் என தெரிகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக முதன்மை செயலாளர் ஆர் எஸ் பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு புகார் அளித்தார். அதில் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ரூ 4800 கோடி மதிப்பிலான 5 நெடுஞ்சாலை திட்ட பணிகள் தொடர்பான ஒப்பந்தங்களை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய உறவினர்களுக்கு முறைகேடாக அளித்துள்ளார்.
இந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதிலும் முறைகேடு நடந்ததாக ஆர் எஸ் பாரதி தெரிவித்திருந்தார். இதையடுத்து 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர் எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார்.

எடப்பாடி பழனிசாமி
அந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தேவைப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமியிடம் சிபிஐ விசாரணை நடத்தலாம். வழக்குப் பதிவும் செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியை சிபிஐ விசாரிக்க கடந்த 2018 ஆம் ஆண்டு இடைக்கால தடை விதித்திருந்தது. மேலும் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.

லஞ்ச ஒழிப்பு துறை
இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போதைய நிலையே அதாவது லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் கட்ட விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காத தற்போது நிலையே தொடர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

மேல் நடவடிக்கை
இந்த வழக்கை நீதிபதி இளந்திரையன் இன்று விசாரித்தார். இன்றைய விசாரணையில், நெடு9ஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க தடை இல்லை; இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல் நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications