நாம் தமிழர் நிர்வாகி 'குண்டாஸ்' சாட்டை துரைமுருகனின் ஜாமீன் ரத்து! சீமான் சொன்ன அடேங்கப்பா விளக்கம்!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அவதூறாக பேசியதால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூ டியூபருமான சாட்டை துரைமுருகனுக்கு முன்னர் வழங்கிய ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று ரத்து செய்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கன்னியாகுமரி கூட்டத்தில் இழிவுபடுத்தி பேசியதால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் மீது அவதூறுகளை இனி பரப்ப மாட்டேன் என உறுதி அளித்ததால் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் கிடைத்தது.

சாட்டை துரைமுருகன் கைது- குண்டாஸ்
ஆனால் ஶ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் நிறுவன விடுதியில் உணவை சாப்பிட்ட பெண் ஊழியர்கள் பாதிக்கப்பட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அந்த போராட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பிவிட்டார் சாட்டை துரைமுருகன் என்ற குற்றச்சாட்டில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சாட்டை ஜாமீன் ரத்து
கடந்த 6 மாதங்களாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சாட்டை துரைமுருகன். இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, சமூக வலைதளங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வந்தவர் சாட்டை துரைமுருகன். நீதிமன்றத்தில் உறுதி அளித்த பின்னரும் அதனை மீறி அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்பியதால் சாட்டை துரைமுருகனின் ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது.

சமூக வலைதளங்களுக்கு எச்சரிக்கை
அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டால் அதனை சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களே நீக்க வேண்டும். அவ்வாறு நீக்காவிட்டால் சமூக வலைதள நிறுவனங்களும் குற்றவாளிகள்தான். இத்தகைய அவதூறுகளை போலீசார் நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்தது.

சீமான் சொன்ன காரணம்
இதனிடையே சென்னை புழல் சிறையில் இன்று சாட்டை துரைமுருகனை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சாட்டை துரைமுருகனுக்கு நீதி கிடைக்க வழக்கறிஞர்கள் குழு உரிய நடவடிக்கை எடுக்கும். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் நாடுவோம். ஒருவேளை நான் இன்று சிறைக்கு சென்று சந்தித்ததால் சாட்டை துரைமுருகனின் ஜாமீனை ரத்து செய்துவிட்டார்களோ என்னவோ என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications