மாற்றுத்திறனாளி வழக்கறிஞரை தாக்கிய எஸ்.ஐ. - "ரூ.5 லட்சம் இழப்பீடு".. உயர் நீதிமன்றம் 'பரபர' உத்தரவு
சென்னை: மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், மாற்றுத் திறனாளிகளை கையாள்வது குறித்து போலீஸாருக்கு பயிற்சி வழங்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மேற்கண்ட உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள முத்துநகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். வழக்கறிஞரான இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் அளித்த புகார் தொடர்பாக, தாராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்கறிஞர் முருகானந்தத்தை கைது செய்துள்ளார். அப்போது, தான் மாற்றுத்திறனாளி எனக் கூறிய பின்னரும், முருகானந்தத்தை எஸ்.ஐ. கார்த்திகேயன் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவரை ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும் தெரிகிறது.

மனித உரிமை ஆணையத்தில் புகார்
பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்ட முருகானந்தம், அதே ஆண்டு மார்ச் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, தனக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கறிஞர் முருகானந்தம் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், வழக்கறிஞர் முருகானந்தத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும், அவரை தாக்கிய போலீஸ் எஸ்.ஐ.க்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தில் அப்பீல்
மாநில மனித உரிமை ஆணையத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்தும், தனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும் வழக்கறிஞர் முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும் தனது மனுவில், "தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் முருகானந்தம் தனது மனுவில் கூறியிருந்தார்.

ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு..
இந்த மனுவானது, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "பாதிக்கப்பட்ட முருகானந்தத்துக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டனர். இந்த தொகையில் ரூ. 4 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும், மாற்றுத் திறனாளிகளை கையாள்வது தொடர்பாக காவலர் முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் பயிற்சி வழங்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பராமரிப்பது தொடர்பாக மாவட்டந்தோறும் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் டிஜிபிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications