டெண்டர் முறைகேடு:கடும் நடவடிக்கை கூடாது என உத்தரவிட கோரிய எஸ்.பி.வேலுமணி கோரிக்கை டிஸ்மிஸ்- ஹைகோர்ட்
சென்னை: டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்; இவ்வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
அதிமுக ஆட்சிக் கால டெண்டர்கள் முறைகேடுகள் தொடர்பாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை,கோவை மாநகராட்சிகளில் டெண்டர்கள் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது இந்த வழக்குகள் போடப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.
இன்றைய விசாரணையின் போது எஸ்.பி.வேலுமணி தரப்பில் மனு ஒன்றுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை வாபஸ் பெறுகிறோம்; வழக்குகளை ரத்து செய்யக் கோரி குற்றவியல் பிரிவில் மனு கொடுத்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டது. அத்துடன், தங்கள் தரப்பு மீதான விசாரணையின் போது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதன் பின்னர், இவ்வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கோரும் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அதேபோல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது; மேலும் இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யக் கூடாது என்றனர்.
மேலும் எஸ்.பி.வேலுமணி தரப்பின் மனுவுக்கு ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்க வேண்டுமா?- ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு! -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications