அடி மேல் அடி.. சீமானுக்கு முளைத்த புதிய சிக்கல்! போலீஸுக்கு ஹைகோர்ட் போட்ட ஆர்டர்.. மேட்டர் சீரியஸ்!
சென்னை: நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி சீமான் மீதான வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்த வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறை தரப்பு தயாராகி வருகிறது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் சீமான் மீது கூடுதலாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதித் துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், தமிழக டிஜிபிக்கு புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும் ஆனால் அவருடைய பேச்சு அரசியலமைப்புச் சட்ட விரோத பேச்சாக இருந்ததாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சுகேந்திரன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, கீழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.
சீமான்: இதையடுத்து அந்த வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறை தரப்பு தயாராகி வருகிறது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் சீமான் மீது கூடுதலாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சீமான் ஆவேசமாகவும் அதிரடியாகவும் அதே நேரத்தில் சில நேரங்களில் சர்ச்சையாக பேசுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படித்தான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்ச்சையில் சிக்கினார். யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சீமான் நீதித்துறை, நீதிபதிகள் , மற்றும் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து நேரடியாக விமர்சித்து இருந்தார்.
இடையில் சில ஆபாச வார்த்தைகள் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞரான சார்லஸ் அலெக்சாண்டர் தமிழக டிஜிபிக்கு புகார் கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தான் தற்போது அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் அலெக்சாண்டர் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications