குட்கா: உரிமைக் குழு 2-வது நோட்டீசுக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் மனு- இன்று ஹைகோர்ட்டில் விசாரணை
சென்னை: சட்டசபைக்கு குட்கா கொண்டு வந்தது தொடர்பாக உரிமைக் குழு அனுப்பிய 2-வது நோட்டீசுக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தடையை மீறி விற்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்த 2017-ல் சட்டசபைக்குள் குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏக்களை கொண்டு சென்றனர். இது சபை விதிகளுக்கு எதிரானது என கூறி திமுகவின் 21 எம்.எல்.ஏக்களுக்கும் உரிமை குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த மாதம் 25-ந் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், நோட்டீஸ் நடைமுறையில் தவறுகள் உள்ளதால் ரத்து செய்ய உத்தரவிட்டது; அதேநேரத்தில் உரிமைக் குழு விரும்பினால் புதிய நோட்டீஸ் அனுப்பலாம் எனவும் தீர்ப்பளித்தது.
இதனிடையே சட்டசபை உரிமைக் குழு மீண்டும் ஸ்டாலின் உட்பட 21 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதற்கு எதிராக திமுக எம்.எல்.ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications