மேற்கு மாம்பலம் பிரபல தனியார் பள்ளி.. நிபந்தனைபடி இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை.. ஐகோர்ட்
சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ சீத்தாராம் வித்யாலயா என்ற பள்ளிக்கூடத்தை ஸ்ரீராம் சமாஜ் என்ற சங்கம் நடத்தி வருகிறது. இந்த சங்கம், குடியிருப்பு கட்டிடம் என்று தரை தளம் மற்றும் 2 மாடிகளுடன் கூடிய கட்டிடம் கட்ட அனுமதி பெற்றது. ஆனால், தரை தளம் மற்றும் 3 மாடிகள் கொண்ட கட்டிடத்தை கட்டி, அதில் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறது. இந்த பள்ளியின் அங்கீகாரம் தொடர்பாக மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம் ராமகிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீ சீத்தாராம் வித்யாலயா என்ற பள்ளிக்கூடத்தை ஸ்ரீராம் சமாஜ் என்ற சங்கம் கடந்த 1987ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. ப்ரிகேஜி முதல் 12ம் வகுப்பு வரை இங்கு செயல்படகிறது. இப்பள்ளியை நடத்தும் ஸ்ரீராம் சமாஜ் சங்கம், குடியிருப்பு கட்டிடம் என்று தரை தளம் மற்றும் 2 மாடிகளுடன் கூடிய கட்டிடம் கட்ட அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால், தரை தளம் மற்றும் 3 மாடிகள் கொண்ட கட்டிடத்தை கட்டி, அதில் பள்ளிக்கூடத்தை ஸ்ரீராம் சமாஜ் சங்கம் நடத்துகிறது என கூறப்படுகிறது. இதனால் இந்த தனியார் பள்ளிக்கூடத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை புதுப்பிக்க கோரும் விண்ணப்பம் கடந்த 2022-ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், "பள்ளிக்கூட கட்டிட திட்ட அனுமதி சான்றிதழை சமர்பிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் பள்ளிக்கூடத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை தாக்கல் செய்யாததால், அந்த அங்கீகாரத்தை புதுப்பிக்கும் விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
எனவே, பள்ளி அங்கீகாரத்தை புதுப்பிக்கக்கோரி ஸ்ரீராம் சமாஜ் அமைப்பு 2 வாரத்துக்குள் மீண்டும் மனு கொடுக்கவேண்டும். அந்த மனுவை மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குனர் ஆய்வு செய்து, அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும். அவ்வாறு நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால், சட்டப்படி பள்ளிக்கூடத்தின் மீது இயக்குனர் நடவடிக்கை எடுக்கவேண்டும்" இவ்வாறு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் இப்போது நடந்து வரும் வழக்கில் பள்ளி அங்கீகாரத்தை புதுப்பிக்கக்கோரி ஸ்ரீராம் சமாஜ் அமைப்பு 2 வாரத்துக்குள் மீண்டும் மனு கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த மனுவை மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குனர் ஆய்வு செய்து, அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும். அவ்வாறு நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications