ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் பணம் பறித்ததாக வழக்கு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதாகக் கூறி பணம் பறித்ததாக ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து 930 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக பாசி நிறுவனத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய நிதி நிறுவன இயக்குனர் கமலவள்ளி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

சில நாட்களில் திரும்பி வந்த கமலவள்ளி, வழக்கில் இருந்து விடுவிப்பதாகக் கூறி, 3 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக ஆனைமலை காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் மோகன்ராஜ், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு அப்போதைய ஆய்வாளர் சண்முகையா ஆகியோருக்கு எதிராக புகார் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், அப்போது மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மற்றும் போலீசாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தது. இதை எதிர்த்து பிரமோத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி விவேக் குமார் சிங் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் பிரமோத் குமார் லஞ்சம் கேட்டு பெற்றார் என்பதை நிரூபிக்க சிபிஐ தவறி விட்டதாகவும், அவர் சார்பாக மற்றவர்கள் வாங்கினார்கள் என குற்றம் சாட்டியது வெறும் யூகத்தின் அடிப்படையிலானது எனக் கூறினார்.
மேலும், "இந்த வழக்கில் இருந்து பிரமோத் குமாரை விடுவிக்க மறுத்தும், குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தும் கோவை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை" ரத்து செய்கிறேன் என்று உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் இருந்து பிரமோத் குமாரை விடுவித்தும் நீதிபதி விவேக்குமார் சிங் உத்தரவிட்டார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications