தீபாவளி வந்தாச்சு.. சென்னை தீவு திடலில் பட்டாசு விற்பனை தொடங்குமா? உயர்நீதிமன்றத்தில் முக்கிய ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரவுள்ள தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு, கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லை என்றும் டெண்டர் நியாயமான முறையில் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

diwali high court

அந்த மனுவில், தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்காக டெண்டர் அறிவிப்பாணை கடந்த 13 ம் தேதி வெளியிடப்பட்டது.

அதில் தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் நிர்வாக இயக்குனரே டெண்டர் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் டெண்டரை மாற்றியமைக்கவும், டெண்டர் விண்ணப்பத்தை எந்த காரணமும் தெரிவிக்காமல் ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் அதிகாரம் உள்ளதாக டெண்டர் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த போன்ற சில நிபந்தனைகளை நீக்கி வரும் அக்டோபர் 18 ம் தேதி முதல் நவம்பர் 1 ம் தேதி வரை தீவுத்திடல் பட்டாசு கடை அமைப்பதற்கான திருத்தப்பட்ட டெண்டரை வெளியிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் இருந்து கூட்டுறவு சங்கத்திடம் மாற்றி இருப்பதாக தெரிவித்தார். மேலும் கூட்டுறவு சங்கத்தின் இணை பதிவாளர் முருகானந்தம் தரப்பில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தீவுத்திடலில் 50 பட்டாசுக்கடை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும், 46 கடைகள் பட்டாசு விற்பனையாளர்களுக்கும், மீதமுள்ள 4 கடைகள் கூட்டுறவு சங்கம் சார்பில் அமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு கடைகள் ஏ, பி, சி,டி என பிரிக்கப்பட்டு அதற்கான விலையும் அதில் அறிக்கப்பட்டுள்ளது அதன் படி ஏ பிரிவில் கடைகள் அமைக்க ஒவ்வொரு கடைக்கும் 2,25,000 ரூபாயும், பி பிரிவில் கடைகள் அமைக்க ஒவ்வொரு கடைக்கும் 4 லட்ச ரூபாய், சி பிரிவில் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், டி பிரிவில் கடைகளை 3 லட்ச ரூபாயும் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான டெண்டர் வரும் அக்டோபர் 24 ம் தேதி மாலை 3 மணிக்கு தீவுத்திடலில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தீவுத்திடல் வளாகத்திற்கு வாடகையாக 82 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு கூட்டுறவு சங்கம் செலுத்த வேண்டி உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் விஜய் ஆனந்த் ஆஜராகி, மின்சாரம், தீயணைப்பு வசதிகள், கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என வாதம் வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தீவுத்திடலில் பட்டாசுக் கடை அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+