தடையை மீறி ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ்.. அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
சென்னை: ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் நீதிமன்ற உத்தரவை மீறி நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையினை மீறி டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தீர்ப்பாயம் மீண்டும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர். இந்த ரெய்டில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதனை தொடர்ந்து ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா
இந்த ரெய்டுக்கு பிறகு இருவரது வீடுகளும் சீல் வைக்கப்பட்டது. அமலாகக்த்துறையின் இந்த நவடிக்கையினை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகிய இருவரும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லக்ஷ்மி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது எதன் அடிப்படையில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது என்று அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் பதில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதனை பார்த்த நீதிபதிகள், இது வெறும் தகவல்களாக உள்ளது. ஆவணங்கள் எங்கே? வீட்டில் சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
நீதிமன்றம் தடை விதித்தும் நோட்டீஸ்
தொடர்ந்து அமலாக்கத்துறைக்கு சீல் வைக்க என்ன அதிகாரம் இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனால் சீலை அகற்றி, நோட்டீஸை எடுத்துவிடுகிறோம் என்று அமலாக்கத்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை என்று நீதிபதிகள் கூறினர்.
தொடர்ந்து டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையின் மேல் நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்த வழக்கில் எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையிலும், ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத்துறை தீர்ப்பாய அதிகாரி கடந்த ஜூலை 11 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்றும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
வேண்டுமென்றே மீறியுள்ளது
இதற்கு அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர், "இந்த வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கும் முன்பாகவே மனுதாரரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தீர்ப்பாயத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இந்த நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது" என்று பதில் அளித்தார்.
ஆனால் அமலாக்கத்துறை வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், "ஒவ்வொரு முறையும் அமலாக்கத்துறை இப்படி செயல்பட்டதாலேயே இந்த இடைக்கால தடை விதித்தோம். தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பினால் இதை ஏற்க முடியாது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமலாக்கத் துறை வேண்டுமென்றே மீறியிருப்பது கண்டனத்துக்குரியது. மனுதாரர் விரும்பினால் அவமதிப்பு வழக்கு தொடரலாம்" என்று உத்தரவிட்டனர்.
மேலும் அடுத்த விசாரணை ஏற்கனவே நிலுவையில் உள்ள பிரதான வழக்குடன் வரும் ஆகஸ்டு 6 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் அதற்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications