நம்மள முடிச்சு விட்டீங்க போங்க..சினிமா ரிவ்யூக்களுக்கு தடை கேட்டு ஹைகோர்ட்டில் வழக்கு! அதிரடி ஆர்டர்
சென்னை: திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், விமர்சனம் கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகள் மற்றும் யூ- டியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா படம் குறித்து சமூக ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகின. இதனால் இப்படத்தின் வசூலானது மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்த பின்னணியில், படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை வெளியிடுவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் போது, அவை குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வெளியிடப்படுவதால் படங்கள் தோல்வி அடைவதால், திரைத்துறையில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சவுந்தர் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியாவதால், படத்தை பார்க்க விரும்பும் மக்களின் மனநிலை மாறுவதாகவும், படத்தில் நடித்த நடிகர், இயக்குனர் குறித்து அவதூறு பரப்பப்படுவதாக தெரிவித்தார்.
அவதூறு பரப்புவது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதி, விமர்சனம் கருத்து சுதந்திரம் என்பதால், பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும், சில படங்கள் நல்ல விமர்சனங்களை பெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க மறுத்த நீதிபதி, வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகள் மற்றும் யூ- டியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
பின்னணி: 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு பப்ளிக் ரிவியூ மூலம் பெருமளவில் பாதிப்பை யூட்யூப் சேனல்கள் ஏற்படுத்தியுள்ளன எனவும், அனைத்து திரையரங்கு வளாகத்திலும் முதல் காட்சி ரசிகர் பேட்டியை தடை செய்ய வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்," 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை YouTube Channel- ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம் என கூறியிருந்த நிலையில், தற்போது வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
பாரதிராஜா உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! அமைச்சர் ராஜ்மோகன் தகவல் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications