ஏக்கர் கணக்கில் அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலம்.. அலறிய அரியலூர்! விசிக தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு
சென்னை: பஞ்சமி நிலம் என்று உறுதி செய்யப்பட்டால் நான்கு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் கோட்டாட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அன்பானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள், பெரிய நாகலூர் பகுதியில் அதிகளவில் உள்ளது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்ததாகவும், அதில் கிடைத்த தகவலின்படி பஞ்சமி நிலங்களை தனி நபர் பட்டா பெற்றிருப்பதும், பின் அந்த நிலங்களின் ஒரு பகுதியை தன் வாரிசுகளுக்கு பெயர் மாற்றி பட்டா பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்பி, தாசில்தார்களுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து பட்டா போட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பட்டியலின மக்களுக்கு நிலங்களை மீட்டு தர உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணை வந்தது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சீனிவாசராவ் ஆஜராகி வாதிட்டார். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் வருவாய் கோட்டாட்சியர் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து விதிமீறல்கள் இருந்தால் சட்டத்துக்கு உட்பட்டு நான்கு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
பஞ்சமி நிலம் என்றால் என்ன?: ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் சோறுடைத்த பூமி என்று இன்றும் பெருமையுடன் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் இது பஞ்சமர்களின் ரத்தம் சிந்திய பூமி என்றுதான் சொல்ல வேண்டும். ஆய்வாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள். அதாவது, பூமியில் பிறக்கும்போது யாரும் நிலம், சொத்துக்களுடன் பிறப்பதில்லை. அப்படி இருக்கையில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் எப்படி இவ்வளவு நிலம் வந்தது என்பதுதான் கேள்வி.
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, வட ஆற்காடு, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலம் பண்ணையார்களின் கைகளில் குவிந்து கிடந்தது. இப்படி குவிந்து கிடந்தது 10, 100 ஏக்கர் கிடையாது. ஆயிரம் கணக்கு ஏக்கரில் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் நிலம் இருந்தது. நிலம் இருந்தால் மட்டும் போதுமா? அதில் இறங்கி வேலை செய்தால்தானே சாகுபடி கிடைக்கும்,பணம் வரும். ஆனால் பண்ணையார்கள் வேலை செய்யமாட்டார்கள். இதற்காக சிலர் இருந்தனர். ஒரு வேளை கஞ்சிக்காக நாள் முழுக்க நிலத்தில் வேலை செய்தனர். அதே நிலத்தில் செத்தும் போனார்கள்.
இவர்கள்தான் பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த பஞ்சமர்களின் வாழ்க்கை இப்படியே முடிந்து போவதா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இதில் முக்கியமானவர்தான் அயோத்திதாசர். அதேபோல கிறிஸ்தவ மிஷனரி சங்கத்தை சேர்ந்த ஆடம் ஆண்ட்ரு உள்ளிட்டோரும் குரல் எழுப்பினர். இது ஆங்கிலேயர்களின் கவனத்திற்கு சென்றது. நியாயத்தை உணர்ந்த சில ஆங்கிலேய அதிகாரிகளும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், பஞ்சமர்களுக்கு நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
இப்படியாக பஞ்சமி என்று ஒதுக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட சில நிலங்கள் பஞ்சமி நிலங்கள் என ஒதுக்கப்பட்டன. இந்த நிலங்கள் பட்டியலின மக்களுக்கு சொந்தமானதாகும். இதை விற்க முடியாது. அதாவது முதல் 10 ஆண்டுகளுக்கு இந்த நிலத்தை யாரிடமும் விற்க முடியாது. பின்னர் தங்கள் சமூகத்தை சேர்ந்தவரிடம் விற்கவோ, குத்தகை விடவோ செய்யலாம்.
மீறி வெளியாட்களுக்கு விற்கப்படும் பட்சத்தில், அது அரசாங்கத்திற்கு சொந்தமானதாக கருதப்படும். இதற்கு எந்த இழப்பீடும் வழங்கப்படமாட்டாது. ஆனால் இலவசப் பஞ்சமி நிலங்கள் காலப்போக்கில் நிபந்தனைகளுக்கு மாறாகப் பிற சமூகத்தினருக்கு 2.5 லட்சம் ஏக்கர் நிலம் கைமாறியுள்ளதாகத் தமிழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று பஞ்சமி நிலத்திற்காக தலித் இயக்கங்கள் போராடி வருகின்றனர். பிறக்கும் போது யாரும் நிலத்துடன் பிறப்பதில்லை. ஆனால் இறப்பதற்குள் ஒரு துண்டு நிலத்தையாவது வாங்கிவிட வேண்டும் என்று ஆதி திராவிட மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
-
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications