திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கு.. அவரது தம்பியின் ஜாமீன் மனு 2 வது முறையாக தள்ளுபடி
சென்னை: தி.மு.க. முன்னாள் எம்.பி.டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், டாக்டர் மஸ்தான் சாவில் மர்மம் உள்ளதாக அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் மஸ்தான் கார் டிரைவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டாக்டர் மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரது தம்பியான கவுஸ் அஷாம் பாஷா கைது செய்யப்பட்டார்.
ஜாமீன் கோரி கடந்தமுறை தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக கவுஸ் அஷாம் பாஷா ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை முடிந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கவுஸ் அஷாம் பாஷா சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
காவல்துறை சார்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் வினோத் சொத்துக்காக திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை எனவும் விசாரணை முடிந்த நிலையிலும் இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என நீதிமன்றத்தில் தெரிவித்தார்
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி இரண்டாவது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த கவுஸ் அஷாம் பாஷா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications