ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி வேட்பாளர் மனு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
உண்மை தகவல்களை மறைத்து மனு தாக்கல் செய்தவர்களை, வேட்பாளர்களாக அறிவித்ததாகக் கூறி சுயேட்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். தகவல்களை மறைத்தவர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்ட நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், வேட்பு மனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து மனுதாரர் அளித்த புகார் மனு மீது தேர்தல் ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தினர். மேலும், தேர்தல் முடிந்துவிட்டதால் இடைத்தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட முடியாது எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 46 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் 237 வாக்குச்சாவடிகளிலும், மக்கள் ஆர்வமுடன் வாக்குகளைச் செலுத்தினர். வீரப்பன் சத்திரத்தில் 49 ஆவது வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடுவதாக திமுக மற்றும் நாம் தமிழர் தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் முற்றிய நிலையில் போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாகனங்களில் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 67.97 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில், 74.79 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது அதைவிட சுமார் 7 % வாக்குகள் குறைவாகப் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (8 ஆம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications