கோவை இருகூர் - கர்நாடகா இடையே பாரத் பெட்ரோலியம் பைப்லைன் திட்டம்.. தடை கோரிய மனு தள்ளுபடி!
சென்னை: கோவை மாவட்டம் இருகூர் - கர்நாடகாவின் தேவாங்கோதி இடையே பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொள்ளும் பைப் லைன் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் இருகூர் மற்றும் கர்நாடகாவின் தேவாங்கோதி இடையே பாரத் பெட்ரோலியம் நிறுவனம் பைப் லைன் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை இருகூரை சேர்ந்த விவசாயி கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கொச்சி - கோவை - கரூர் மார்க்கமாக பெட்ரோலியம் பைப் லைன் அமைக்கும் திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்திய போது உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் இருகூர் - தேவாங்கோதி பைப் லைன் திட்டத்தை அமல்படுத்தினால் தனது விவசாய நிலம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் கருத்துக்களை கேட்காமலும், சட்ட விதிமுறைகளை பின்பற்றாமலும் பார்த்துக் கொள்ளப்படும் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிடி ஆஷா, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications