ராமதாஸ் தரப்புக்கு பெரிய அடி.. மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!
சென்னை: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு ஏற்புடையது அல்ல என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம் வைத்தது.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து உட்கட்சி பிரச்சனை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தை நாடினார். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டை நாடும்படி ராமதாசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டிலும் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கும்படி ராமதாஸ் தரப்பில் முறையிட்டனர். மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பிறகு அவசர வழக்காக விசாரிக்கும்படி விடுத்த கோரிக்கையையும் ஏற்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வரும் சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதால், மனு செல்லதக்கது அல்ல என வாதிடப்பட்டது.
அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டு அவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். தந்தைக்கு எதிராக செயல்படவில்ல" என விளக்கம் அளித்தார். பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தரப்பில் அளித்த விளக்கத்தில், "ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டாமல் தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டார்" என தெரிவிக்கப்பட்டது.
ராமதாஸ் தரப்பில், "ஏற்கனவே நிர்வாக குழு கூடி ராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு பரிசீலனை செய்யப்படாததால் தான் வழக்கு தொடரப்பட்டது." எனக் கூறப்பட்டது.
அதன் பிறகு, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications