ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு.. அமலாக்கத்துறைக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத அமலாக்கத்துறைக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை அவகாசம் வழங்கிய பின்னரும் பதில் மனுத் தாக்கல் செய்யாதது சரியான நடவடிக்கை அல்ல என்று கூறிய நீதிபதிகள், அபராதத் தொகையை ஐகோர்ட் நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிட்டுள்ளனர்.

டாஸ்மாக் நிறுவனத்தில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியது. இதன்பின் தொடர்ந்து ஆவணங்களைக் கைப்பற்றுவதற்காக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதன்பின் இருவரின் வீடுகளுக்கும் சீல் வைத்து சென்றனர்.

Madras High Court Fines ED Rs 30 000 in Akash Baskaran Vikram Ravindran Case

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் இருவரும் தனித்தனியாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லக்‌ஷ்மி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பாகத் தாக்கல் செய்த ஆவணங்களில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை.

இதனால் அமலாக்கத்துறையின் மேல் நடவடிக்கைக்குத் தடை விதித்து உத்தரவிட்டதோடு, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த பொருட்களையும் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி அமலாக்கத்துறை சார்பாக மீண்டும் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

அப்போது சென்னை உயர்நீதிமன்றம் தரப்பில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் கண்டனத்திற்குரியது என்று கூறி, வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இன்று வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் பதில் மனு இன்னும் தயாராகாததால், கூடுதல் அவகாசம் கேட்டார். அதற்கு நீதிபதிகள், ஏற்கனவே 2 முறை அவகாசம் வழங்கிய பின்னரும் மேலும் அவகாசம் கேட்பது தவறு என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து பதில் மனுத் தாக்கல் செய்யாத அமலாக்கத்துறைக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ரூ.30 ஆயிரம் அபராதத் தொகையை ஐகோர்ட் நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிட்டதோடு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+