ஓபிஎஸை போலீசாரால் தடுக்க முடியவில்லை.. வன்முறைக்கு காரணம் என்ன? நீதிமன்றத்தில் விளக்கம்!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகி செய்யப்பட்டார். இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அதிமுக அலுவலகத்தை ஓ பன்னீர்செல்வம் கைப்பற்றியதோடு, சில முக்கிய ஆவணங்களையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த இரு வழக்குகளும் நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
இதனைத்தொடர்ந்து இபிஎஸ் தரப்பு வாதம் முடிவடைந்த பின், ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ் வாதிட்டார். அதில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் என்ன நடந்தது என்பது எப்படி தெரியும்? தகவல் ஆதாரத்தைக் கூறாமல் அவர் எப்படி குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அதிமுகவின் பொருளாளராக இருந்தவர். அவர் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு செல்ல அப்போது எந்தத் தடையும் இல்லை என்று வாதிட்டார். தொடர்ந்து, ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல எந்த தடையும் அப்போது இல்லை. ஆனால் சூழலை கருத்தில் கொண்டு அவர் அதிமுக தலைமை அலுவலகம் செல்வதை தவிர்த்திருக்கலாம் என்று நீதிபதிகள் கருத்து கூறினர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறை தரப்பில், அதிமுக அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 8.30 மணியளவில் ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வந்தபோது, அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், அவர் நான் பொருளாளர். அதனால் எனக்கு கட்சி அலுவலகம் செல்ல உரிமை உள்ளது என்று கூறி, கட்சி அலுவலகம் சென்றார். இதனைத்தொடர்ந்து அங்கு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் தலையிட்டதால் மட்டுமே உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக நாளை வீடியோ ஆதாரங்கள் மற்றும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications