சொந்தக் கட்சியினரை கூட கட்டுப்படுத்த தெரியாதா? தவெக மாவட்டச் செயலாளரை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. விஜய்யின் நாமக்கல் பிரச்சாரத்தின் போது தனியார் மருத்துவமனை தாக்கப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், சொந்தக் கட்சியினரை கூட கட்டுப்படுத்த தெரியாதா என்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இதனால் முன்னெச்சரிக்கையாக முன் ஜாமீன் கேட்டு சதீஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நான் எந்த குற்றமும் செய்யவில்லை. அரசியல் காரணங்களுக்காக வழக்கில் என்னையும் சேர்த்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த ஒரே காரணத்திற்காக எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி செந்தில் குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், தவெகவினரின் செயல்பாடுகள் காரணமாக ரூ.5 லட்சம் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக 8 வழக்குகள் சதீஷ் குமாருக்கு எதிராக பதிவாகி இருக்கிறது என்று கூறியதோடு, அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் தாக்கல் செய்தனர். இதன்பின் நீதிபதி செந்தில் குமார், கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போது, எதுவும் தெரியாது என்று மனுதாரர் எப்படி கூறலாம்?
சொந்தக் கட்சியினரைக் கூட கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியதோடு, முன் ஜாமீன் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தனர். இதனால் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா என்று கேள்விகள் எழுந்துள்ளது.
-
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!












Click it and Unblock the Notifications