தேசிய நெடுஞ்சாலை நிலம் ஆக்கிரமிப்பு- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் வழக்கில் ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்ததாக அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு எதிரான வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் வணிக கட்டிடங்கள், வழிப்பாட்டு தளம் உள்ளிட்டவைகளை கட்டி ஆக்கிரமித்துள்ளதாக அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு எதிராக ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆக்கிரமிப்பு
இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆதிபராசக்தி சித்தர் பீடம் செய்துள்ள ஆக்கிரமிப்பால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.மேலும் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காமல் நீர் நிலையில் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைக்கு உத்தரவு
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மனுதாரர் தெரிவித்ததையடுத்து இது தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏரி ஆக்கிரமிப்பு
மேல்மருவத்தூர் ஆதிபரசாக்தி பீடத்துக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேல்மருவத்தூர் கோவிலில் வருமானம் அதிகரித்த நிலையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மெகா கட்டிடங்களுடன் உருவெடுத்தன. சோத்துபாக்கம் கீழ் மருவத்தூர் ஏரியை ஆக்கிரமித்தே இந்த கோவில் நிர்வாகத்தின் பல கட்டிடங்கள் கட்டப்பட்டன என்பது முந்தைய வழக்கு. இவ்வழக்கு விசாரணையின் போது மனுதாரரர் குறிப்பிட்ட நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகம் என அரசு தரப்பிலேயே ஒப்பு9க் கொள்ளப்பட்டன.

ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்
இவ்வழக்கில் சில மாதங்களுக்கு முன்னர் மேல்மருவத்தூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களின் தற்போதைய நிலை, ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் 93 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த 93 ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து தள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், ஆதிபராசக்தி கோவில் கட்டிடங்களும் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications