PG ஹாஸ்ட்ல்களில் தங்கும் மாணவர்கள், வேலைக்கு செல்வோருக்கு.. சென்னை ஹைகோர்ட் சூப்பர் தீர்ப்பு
சென்னை: மாணவ, மாணவியர், பணிபுரியும் ஆண்கள், பெண்கள் தங்கும் விடுதிகளை (ஹாஸ்டல்களை) வணிக கட்டிடங்களாக கருதி அவைகளுக்கு சென்னை, கோவை மாநகராட்சிகள் வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் வரிகளை விதித்து வருகின்றன. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் தங்கும் விடுதிகளை, வணிக கட்டிடங்களாக கருதி விதிக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்து வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகள் சொத்து வரியை நிர்ணயிப்பதில், கட்டிடத்தின் பயன்பாட்டை பொறுத்து தீர்மானிக்கின்றன. பொதுவாக, ஒரு கட்டிடம் குடியிருப்பு நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா அல்லது வாடகை மூலம் வருமானம் ஈட்டும் வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைப் பொறுத்து வரி விகிதத்தை விதிக்கிறது. அந்த வகையில் விடுதிகள் தங்கும் விடுதிகள் (Mansions), மற்றும் பேயிங் கெஸ்ட் தங்குமிடங்கள் போன்றவை, வாடகைக்குப் பணம் வசூலித்து, லாப நோக்கத்துடன் செயல்படுவதால், அவற்றை வணிக ரீதியான பயன்பாடாக மாநகராட்சி நிர்வாகங்கள் கருதுகின்றன.

சென்னை, கோவையில் ஹாஸ்டல்களுக்கு வரி
எனவே கல்லூரி மாணவ, மாணவியர், பணிபுரியும் ஆண்கள், பெண்கள் தங்கும் விடுதிகளை (ஹாஸ்டல்களை) வணிக கட்டிடங்களாக கருதி அவைகளுக்கு சென்னை, கோவை மாநகராட்சிகள் வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் வரிகளை விதித்து வருகின்றன. இந்த விடுதி கட்டிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் சுமார் ரூ.2½ லட்சம் வரை வரி விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
விடுதி நடத்துவோர் வழக்கு
இதை எதிர்த்தும், இந்த வரி விதிப்பு உத்தரவுகளை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதிகளை நடத்தும் பெண் உரிமையாளர்கள் பலர் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்திருந்தார்கள். இந்த வழக்குகள் எல்லாம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றம் விசாரணை
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- விடுதிகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விடுதி என்பது அதில் தங்கும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் தூங்குவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அதனால், விடுதி என்பது குடியிருப்பு என்ற வகையில்தான் வரும் என்று இந்த உயர்நீதிமன்றம் 2023-ம் ஆண்டு தீர்ப்பு அளித்துள்ளது.
வீடுகளை போல் சொத்து வரி
அதே அளவுகோலைத்தான் இந்த வழக்கிலும் பின்பற்ற முடியும். எனவே, வீடுகளுக்கு சொத்துவரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறதோ, அதே தொகையைத்தான் விடுதிகளுக்கும் வசூலிக்கவேண்டும். இந்த வழக்குகளில், மாநகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு நோட்டீசும் கொடுக்காமல், விடுதிகளை வணிக கட்டிடங்களாக கருதி வரிகளை விதித்துள்ளனர். இது இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே, மனுதாரர்களுக்கு வரி விதிப்பு தொடர்பான மாநகராட்சி அதிகாரிகளின் உத்தரவுகளை ரத்து செய்கிறேன். விடுதிகளை குடியிருப்பாக கருதி வரிகளை விதிக்க வேண்டும்" இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications